Toll Free Numbers in India

Airlines

Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 22 5522
Spice Jet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
Kingfisher - 1800 180 0101



Banks

RBS( ABN AMRO)- 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporatin Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655



Automobiles
Mahindra Scorpio - 1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636

Computers/IT

Adrenalin - 1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004

Indian Railways

Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralized Railway Enquiry 1330/1/2/3/4/5/6/7/8/9

Couriers/Packers & Movers

ABT Courier - 1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171

 Home Appliances

Aiwa/Sony - 1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432



Investments/ Finance

CAMS - 1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Sharekhan - 1800 22 7500
Tata Mutual Fund - 1800 22 0101

Travel

Club Mahindra Holidays - 1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344

Healthcare

Best on Health - 1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262

Insurance

AMP Sanmar - 1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life - 1800 227 227
LIC - 1800 33 4433
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090



Hotel Reservations

GRT Grand - 1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825



Teleshoppin

Asian Sky Shop - 1800 22 1800
Jaipan Teleshoppe - 1800 11 5225
Tele Brands - 1800 11 8000
VMI Teleshopping - 1800 447 777
WWS Teleshopping - 1800 220 777

Others
Domino's Pizza - 1800 111 123

Cell Phones

BenQ - 1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838
Sony Ericsson - 3901 1111

ஹார்ட் டிஸ்க் உருவான பாதை

நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை.

இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன. ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.

1956: ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.

1961: ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.

1961: பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது.

39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.

1963: முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.
1966: புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.

1971: ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.

1973: நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.

1975: ஐ.பி.எம். 62 – ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.

1976: 43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.

1976: ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.

1979: பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.

1979: ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை

5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.

1980: முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.

1981: சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.

1983: ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.

1986: அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.

1988: கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.

1992: ஸீகேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.

1993: முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.

1996: மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.

1997: ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.

1999: மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.

2000: அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீகேட் தயாரித்து வழங்கியது.

2002: பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீகேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.

2005: ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.

2006: நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீகேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.

2006: Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீகேட் வெளியிட்டது.

2007: முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.

2008: லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.

2009: வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.

2009: வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.


நன்றி:- இனையநன்பர்

சிந்தனைக்கு சில...!

சிந்தனைக்கு சில...!


பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும்

தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது

வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை

ஒப்புக்கொள்கிறோம்!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு

ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக

ஏமாந்து போகிறான்

உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்

வென்ற மனிதனாவான்

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம்

பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப்

பெயர்தான் கோழைத்தனம்.

ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

BLUETOOTH பயன்பாடும் பாதுகாப்பும்.

BLUETOOTH பயன்பாடும் பாதுகாப்பும்.
வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.

ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN 0r piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:

அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.

உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.

உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

எழுதியவர் : கார்த்திக்
photoshop தமிழில் கற்றுக்கொள்ளலாம்




நீங்க போட்டோஷாப் தமிழில் கற்கலாம்.உங்களுக்கு photoshop பற்றி நிறைய தெரியனும்னு அவசியம் இல்லைங்க கொஞ்சம் தெரிஞ்சாலே நாமும் photo edititnig பண்ணலாம்.photoshop பற்றிய tutorial கீழே கொடக்கப்பட்டிருக்கும் links மூலம் download செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..இதன் மூலம் basic போடோஷோப் பற்றி நன்கு தெரிந்துக்கொள்ளலாம் .மேலும் நமக்கு தேவையான சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செயுதுக்கொள்ளலாம் .

இங்கே பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் DOWNLOAD
http://www.mediafire.com/?ux0nnhxmjt2
 
நன்றி:- இனையநன்பர்

விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன.

எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா? அந்த நேரத்தில் இந்த ரிப்பேர் டிஸ்க் உங்களுக்கு கைமருந்தாக உதவும். இதில் பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழுதுகளுக்குத் தீர்வு தரும் புரோகிராம்கள் பதியப்படும்.

இவை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கின்றன. அல்லது ரெஸ்டோர் புரோகிராம் போல, முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு செல்கின்றன.

இந்த டிஸ்க்கைத் தயாரிக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவு

1. ஸ்டார்ட் (Start) கிளிக் செய்திடவும். பின் சர்ச் பாக்ஸில்(Search Box), Create a System Repair Disk என டைப் செய்திடவும். மேலிருக்கும் பட்டியலில் ஒரு ஐகான் காட்டப்படும். அதில் கிளிக் செய்திடவும்.

2. இப்போது உங்களுக்கு ஒரு விஸார்ட் கிடைக்கும். இனி, காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை இணைக்கவும். அடுத்து மானிட்டர் திரையில் காட்டப்படும் செய்திகளுக்கேற்ப நடந்து கொள்ளவும். முழு வேலையும் முடிந்த பின்னர், இந்த சிடியைப் பாதுகாப்பாக வைக்கவும்.
எப்போதாவது ஆப்பரேட்டிங் சிஸ்டம் தகராறு செய்து, சிஸ்டம் முடங்கிப் போனால், இந்த சிடியை, சிடி ட்ரேயில் நுழைத்து, இயக்கவும். இவ்வாறு இயக்க உங்கள் பயாஸ் (BIOS)) செட் அப்பில், சிடி வழியாக பூட் செய்வதனையும் சேர்க்க வேண்டும்.

நன்றி:- இனையநன்பர்

இறைவன் ஏன் நம் இதயத்தில் இருக்கிறான்?

 ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். இறைவனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள் சுற்றுலாப் பயணிகளைக் காசு கேட்டுத் துரத்தும் உள்ளூர்ப் பிச்சைக்காரர்கள் போல ஆக்கி விட்டார்கள். எனக்கு நிறைய நகை கொடு பணம் கொடு என்று வகை வகையாகக் கேட்டு ஆண்டவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம், சத்திரம், கிராமம்;, நகரம் என்று எங்கெங்கோ ஒடிப் பார்த்தார் ஆண்டவன். ஆனால் அவரால் மனிதர்களின் அதைக்கொடு, இதைக்கொடு என்ற பிக்கல் பிடுங்கல்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவர் கோயிலை நோக்கி ஒடினாராம்.


அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர்கொண்டது பிச்சைக்காரர்கள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. மனிதன் தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்துக் கொள்வதில்லையே! தன்னுடைய இதயத்தைத் தான் எந்த மனிதனும் பார்ப்பதே இல்லையே! அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்.

கடவுள் ஏன் நம் இதயத்திலே குடியிருக்கிறார்? என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப்படுகிற கதை இது.‘

‘யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம் என்ற மனநிலையிலேயே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நினைப்பது இல்லை. தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப் லைட் வாங்கிக் கொடுத்தால், லைட் வெளிச்சமே வராத அளவிற்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதி விடுவோம்.‘

இந்து சாத்திரப்படி ஒரு பொருளை தானமாகக் கொடுக்கும் போது ‘இனிமேல் இது என்னுடையது இல்லை‘ என்று சொல்லி விட்டுத் தான் கொடுக்க வேண்டும்.

சுமஸ்கிருதத்தில் ‘நம்மா‘ என்றால் என்னுடையது இல்லை என்று பொருள். என்னுடையது இல்லை என்று சொல்லி ஒரு டியூப் லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு ‘இது என்னுடையது‘ என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் தர்மம்?

யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவத்திச் சுருள் வரை கண்ணுக்குத் தெரியாத யார் யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை? எத்தனை?இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான், அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்?‘ என்று யோசித்துப் பார்த்தாலே போதும். நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்பது புரியும்!

அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் இருக்கும் அத்தனை தலை சிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஒர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார்!

நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள்‘ என்பது தான். ‘நமஹா‘ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் ‘போற்றி‘ என்றாலும் இதை நன்றிப் பெருக்கோடு தான் உச்சரிக்க வேண்டும்!

ஆனால் உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது ‘நன்றி‘.

ஒரு முறை நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே பயப்படாதீர்கள். விமானத்தில் சின்னக் கோளாறு தான். விமானி சரி செய்து சமாளித்து விடுவார் என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது.

அப்போது, அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமை மிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது எங்கள் ஏர்லைன்° விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி‘ என்று சொல்லி பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாராசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்து விட்டாளாம்.

நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன நன்றி மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது!.

நன்றி - Hindugermany

கோபம்

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.


நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...

நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...

எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...

இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...

வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)


திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது.

கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு.

ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:

கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்.

ஒரு கருத்தைச் சொல்லும் முறை முக்கியமா? - சொல்லுங்கள் உங்கள் கருத்தை

அன்பு நண்பர்களே,


கீழே உள்ள நான்கு வாக்கியங்களும் படிப்பதற்கு ஒன்றுதான். ஆனால் இந்த நான்கு வாக்கியங்களும் தரக்கூடிய வேறுபட்ட பொருளை நீங்கள் கவனிக்க முடிகிறதா?

இவை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றன என்பதை சிந்தித்துச் சொல்லுங்களேன்.

என்னை வேறு வேலைக்கு அவர்கள் மாற்றியிருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.

என்னை வேறு வேலைக்கு அவர்கள் மாற்றியிருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.

என்னை வேறு வேலைக்கு அவர்கள் மாற்றியிருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.

என்னை வேறு வேலைக்கு அவர்கள் மாற்றியிருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.

சொல்லப்படுகின்ற தகவலை விட சொல்லும் முறைதான் முக்கியம் என்பதை உணரவைக்க நாங்கள் பயன்படுத்தும் பயிற்சிகளில் இது ஒன்று. Communication Skills என்பதில் சொல்லும் முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு என்பது நாம் அறிந்ததுதான்.


இது குறித்த உங்கள் கருத்தை அறிய ஆவலுடன்,

Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

மனதை அதிரவைத்த காதல் கதை......

ஒரு அழகான கிராமம்.அந்தக்


கிராமத்தின் தலைவருக்கு ஒரு

பெண் இருந்தாள்..அவளைப் போல்

ஒரு

அழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை

கேட்டதும்

இல்லை.அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச்

சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து

விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த

கிராமமும் அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்

வேறு வழி

தெரியாத காதல் ஜோடி ஊரை

விட்டு ஒட


தீர்மானித்து ஒரு

நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர்.


உடனே

ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்

தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே

முடியவில்லை.



அதன் பிறகு அவர்கள்

அந்த்க்

காதலை ஏற்றுக் கொள்ள முடிவு

செய்து செய்தித்தாளில்

விளம்பரமும்

கொடுத்தனர்.அதைப்

பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர்

திரும்பியது. சந்தோஷப் பட்ட

ஊர் மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான

முறையில்

திருமணம் செய்ய

முடிவு

செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை

வாங்க

நகரத்திற்குச்

சென்றிருந்தனர்.அப்போது

எதிர்பாராதவிதமாக ஒரு லாரி

மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்

எதிரிலேயே

உயிர்


துறந்தான்.

உடனே அந்தப் பெண்னும்

மனநிலை

பாதிக்கப்பட்டாள்.



ரொம்ப நாட்களுக்குப்

பிறகு

நினைவு திரும்பிய அந்தப் பெண்

குடும்பத்தினருடன்

வசித்து

வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி அவள்

மகள் அவளுடைய


காதலன் நினைவாக

வைத்திருக்கும் உடையில்

இருக்கும்

இரத்த்க் கறையை

உடனே துவைக்க வேண்டும்

என்றது,இல்லா விட்டால்


மோசமான

விளைவுகள்

ஏற்படும் என்றும் எச்சரிக்கை

செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே

தேவதை அந்தப் பெண்னின்

தந்தையிடமும் கனவில்

எச்சரித்தது.ஆனால் அவரும்

அதைக் கண்டு

கொள்ளவில்லை


அடுத்த நாள் அப்பெண்னின்

கனவிலேயே தோன்றி

எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப்

பற்றிக்

கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம்

உணரப்பட்டது.அவள் தாய் அதை

துவைக்கக் கூறினாள்.

உடனே அந்தப் பெண்னும்

அதைத்

துவைத்தாள்.

இருந்தும் தேவதை

மறுபடியும் அடுத்த நாள்

கனவில்

வந்து கறை சரியாகப்

போகவில்லை

என்று

எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண்

அத்துணியைத்

துவைத்தாள்.இருந்தும்


கறை

போகவில்லை.


அடுத்த நாள் காலையில்

அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத்

திறந்தாள்.அப்போது

கனவில்

வரும் அதே பெண் நின்று

கொண்டிருந்தாள். அவள் முகம்

கனவில் வருவதைப் போல் கனிவாக

இல்லாமல்

வெளிறிப் போய் இருந்தது.உடனே

இவள் பயத்தினால்


அலறினாள்.


அந்தத் தேவதை கோபத்துடன்

கூறியது,"லூசாடி நீ!,*ஸர்ப்*

*எக்ஸல்* போடு கறை போயிடும்"

என்றது.


இதைப் படித்ததும் உடனே

என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு!

நானே இதை எனக்கு

அனுப்பியவரைத்

தேடிக்கிட்டு இருக்கேன் ....

இரகசியம், பரம இரகசியம்...

கார் பிரேக் டவுன்.


அது ஒரு இரவு நேரம்.

காட்டு பிரதேசம்.

துணைக்கு யாருமில்லை.

நகரமோ வெகு தொலைவில்.

அருகில் ஒரு மடாலயம்.

'அன்று இரவு எங்காவது தங்கி, பின் காலையில் ஆகவேண்டியதை பார்த்துக்கொள்ளலாம்' என்ற எண்ணம் உதிக்க, மடத்தின் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த துறவியிடம், ' என்னுடைய கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது, இன்றிரவு இங்கு தங்குவதற்கு அனுமதி கிடைக்குமா?' என்றான்.

துறவியும் பெருந்தன்மையுடன் அனுமதித்து அறுசுவை உணவளித்ததோடு, அவனுடைய காரையும் சீடர்களைக் கொண்டு சரிசெய்தார்.

அவனும் மிகுந்த களைப்போடு உறங்கப் போகும் பொழுது, ஒரு விசித்திரமான ஒலியை கேட்டான். இதற்கு முன் கேட்டிறாத அந்த ஒலி அவனை மிகவும் பரவசப்படுத்தியது.

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.

அதற்கு ஒரு துறவி, ' அந்த ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்

நீ ஒரு துறவி அல்ல'.

அவன் மிகுந்த ஏமாற்றமடைந்தாலும், துறவிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு அவனுடைய வழியில் கிளம்பினான்.

ஒரு சில வருடங்களுக்கு பின். . .

மறுபடியும் அதே மடத்தின் அருகில் அவனுடைய கார் பழுதடைந்தது.

அன்று அவனை உபசரித்தது போலவே, இம்முறையும் அவனுக்கு உணவளித்து, காரையும் சரிசெய்தார்கள்.

அன்றிரவும், அந்த வினோத ஒலி!

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.

அதற்கு ஒரு துறவி, ' அந்த ரகசிய ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்
நீ ஒரு துறவி அல்ல'.

அவன், 'சரி! நான் துறவியானால்தான் அந்த ரகசிய ஒலியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றால்... நான் எவ்வாறு துறவி ஆக முடியும்?..'

துறவி பதிலலித்தார்.

' நீ இந்த உலகம் முழுவதும் சுற்றி வந்து, இவ்வுலகில் உள்ள புற்களின் தளைகளின் எண்ணிக்கையையும், மணல் துகள்களின் எண்ணிக்கையையும் மிகச் சரியாக அறிந்து கொண்டால்.. நீயும் துறவி ஆகி விடலாம்'.

அவன் தனது பாதையை நிர்ணயித்துக் கொண்டான்.

40 வருடங்களுக்கு பின்,

அவன் மறுபடியும் அந்த மடத்தின் கதவை தட்டினான்.

அனைத்து துறவிகளின் முன்னிலையில் வெற்றிக்களிப்போடு சொன்னான்.

'நான் உலகம் முழுவதும் சுற்றி வந்தேன்.

மொத்த புற்களின் எண்ணிக்கை 549,483,145,236,284,232.

மொத்த மணல் துகள்களின் எண்ணிக்கை 766,899,231,281,219,999,129,382

மூத்த துறவி,' நல்லது, நீ இப்பொழுது துறவி ஆகிவிட்டாய்.

இப்பொழுது அந்த வினோத ஒலியின் இரகசியத்தை காணலாம்'

மூத்த துறவி, அழகிய மரவேலைப்பாடுகளுடனிருந்த கதவை காட்டி,

'அந்த இரகசியம் இதற்கு பின்னால் இருக்கிறது' என்று, அதன் திறவுகோலை அவனிடம் தந்தார்.

கதவை திறந்தவுடன்.

அதனுள், கல்லினால் ஆன மற்றொரு கதவு.

அதையும் திறக்க,

மாணிக்க கற்களினால் அலங்கரிக்கப்பட்ட கதவு.

உள்ளே,

நீலநிற கற்களினாலான கதவு.

மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக திறந்து உள்ளே போய் கொண்டிருந்தான்.

'மரகதம்'

'வெள்ளி'

'புட்பராகம்'

'செவ்வந்திக்கல்'

இறுதியாக துறவி சொன்னார்,' இதுதான் இறுதி கதவிற்கான திறவுகோல்.'

அவனும் முடிவில்லாப் பயணம் முற்றுப்பெறப்போவதை எண்ணி மிகுந்த ஆர்வத்துடன் அந்த கதவைத் திறந்தான்.

உள்ளே,

அவன் கண்ட காட்சி.

அற்புதம்!

ஆனந்தம்!
பேரின்பம்!

அந்த வினோத ஒலியின் இரகசியத்தை கண்டான்.

இதற்குமுன் அவன் அனுபவித்து அறியாத ஓர் உன்னத உணர்வு.

மெய் மறந்து நின்றான்.

ஆனால், நான் சொல்ல முடியாது..

அது என்னவென்று..

ஏனென்றால்..

நீ ஒரு துறவி அல்ல!.

திருநெல்வேலி மாவட்டத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்

குற்றாலம் : குற்றாலநாத சுவாமி கோவில், சித்திரசபை, அருவிகள்
இலஞ்சி : முருகன் கோவில் ( குற்றாலத்திலிருந்து 3 கி.மீ )

புளியரை : தெட்சணாமூா்த்தி கோவில் ( குற்றாலத்திலிருந்து 12 கி.மீ )

தென்காசி : காசிவி்ஸ்வநாதா் கோவில் ( குற்றாலத்திலிருந்து 5 கி.மீ )

திருநெல்வேலி : நெல்லையப்பா் கோவில் ( குற்றாலத்திலிருந்து 60 கி.மீ )

திருமலைக்கோவில் : மலை மேல் முருகன் கோவில் ( குற்றாலத்திலிருந்து 12 கி.மீ )

திருச்செந்துார் : முருகன் கோவில் ( குற்றாலத்திலிருந்து 120 கி.மீ )

கிருஷ்ணாபுரம் : இயற்கை கலைநயமிக்க சிற்பங்கள் நிறைந்த உலகப்புகழ்பெற்ற இடம் (திருநெல்வேலிருந்து 15 கி.மீ

குற்றாலத்திலிருந்து 75 கி.மீ) திருச்செந்துார் செல்லும் வழியில் உள்ளது.

அச்சன்கோவில் : ஐயப்பன் கோவில் ( குற்றாலத்திலிருந்து 40 கி.மீ )

ஆரியங்காவு : ஐயப்பன் கோவில் ( குற்றாலத்திலிருந்து 30 கி.மீ )

சங்கரன் கோவில் : சங்கர கோமதி அம்மன் கோவில் (குற்றாலத்திலிருந்து 60 கி.மீ )

பால் அருவி : தென் மலை (கேரளா) குற்றாலத்திலிருந்து 20 கி.மீ )

மணிமுத்தாறு அருவி : ( குற்றாலத்திலிருந்து 40 கி.மீ )

பாபநாசம் : பாபநாசம் அணை அகத்தியா் அருவி, பாணதீா்த்தம் அருவி, ( குற்றாலத்திலிருந்து 30 கி.மீ )