லேப்டாப் பேட்டரியை பராமரிப்பதற்கான டிப்ஸ்!



லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.


1. அதிக பேட்டரி பேக்கப்புக்கு..
லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.


2.எப்போது சார்ஜ் செய்ய வேண்டும்..


நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது. குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.


3.சார்ஜ் ஆகும்போது பேட்டரியை பொசுக்குன்னு கழற்றாதீங்க..
லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம். அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.


4. பேட்டரியை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருத்தல்:
2 ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது. அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.


5. பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுதல் மற்றும் குறைத்தல்:
பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.


6. பேட்டரியை மாற்றுதல்:
பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும். எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும். ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது. அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்

ஓல்டு ஸ்டாக், யூஸ்டு கார் தயாரிக்கப்பட்ட ஆண்டை எப்படி கண்டுபிடிப்பது?


ஓல்டு ஸ்டாக், யூஸ்டு கார் தயாரிக்கப்பட்ட ஆண்டை எப்படி கண்டுபிடிப்பது?



கார் வாங்க கனவுகளுடன் ஷோரூமில் நுழைந்தவுடன் அங்கிருக்கும் ஷோரூம் விற்பனை பிரதிநிதிகள் சொல்வதை கேட்டு காதில் வாங்கியவுடன் நமக்கு பிடித்த கலர் காரை தேர்வு செய்துவிட்டு வந்துவிடுகிறோம். நம் கண்ணுக்கு கலர் மட்டும்தான் கண்முன் நிற்கும்.

ஆனால், காரை தேர்வு செய்யும்போது அந்த காரின் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட காரா அல்லது சில மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு நீண்ட நாட்களாக ஸ்டாக் வைக்கப்பட்டுள்ள காரா என்பது பற்றி பலர் பார்ப்பதில்லை.

அந்த காரை சில ஆண்டுகள் கழித்து விற்பன செய்யும்போதுதான் நாம் வாங்கிய தேதிக்கும், தயாரிக்கப்பட்டதற்கும் மாதக்கணக்கில் வித்தியாசம் இருக்கும். இதில், ஆண்டு கணக்குகூட சில சமயங்களில் இடிக்கும்.

இதனால், அந்த காரை விலை குறைத்து மதிப்பிடக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே, காரை தேர்வு செய்யும்போது அது எப்போது தயாரிக்கப்பட்ட கார் மாடல் என்பதை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி இருக்கிறது.

அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு காருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை (வின் நம்பர்)குறிப்பிடுகின்றன. அதில், கார் தயாரிக்கப்பட்ட மாதம் மற்றும் வருஷத்தை துல்லியமாக குறிப்பிடுகின்றன. பூதாகரமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில எழுத்தை குறியீட்டு எழுத்தாக கார் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.


உதாரணமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படு்த்தும் 17 எழுத்துக்களில் 10வது எழுத்து வருஷத்தையும், 12 வது எழுத்து மாதத்தையும் குறிப்பிடுகிறது. இந்த குறியீட்டு எழுத்துக்கள் ஒன்றுதான் என்றாலும், எழுத்து வரிசை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகிறது.

அதெல்லாம் சரி, இந்த வின் நம்பர் காரில் எந்த இடத்தில் பார்ப்பது. காரின் இடதுபுறத்தில் முன்பக்க கண்ணாடியும்(வைன்ட் ஷீல்டு) டேஷ்போர்டும் இணையும் இடத்தில் இருக்கும் அலுமினிய பட்டையில் வின் நம்பர் விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

மேலும், யூஸ்டு கார் வாங்க செல்பவர்கள் தவறாமல் இந்த விபரத்தை கையில் எடுத்துச் செல்வது நலம். ஏனெனில், யூஸ்டு கார் மார்க்கெட்டில்தான் தயாரிக்கப்பட்ட ஆண்டு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இன்று டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தும் எழுத்து வரிசை விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

டாடா மோட்டார்ஸ்:
மொத்தம் 17 எழுத்துக்கள் மற்றும் எண்களை உள்ளடக்கிய வின் குறியீ்ட்டு எழுத்துக்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10வது எழுத்து வருஷத்தையும், 12 வது எழுத்து மாதத்தையும் குறிக்கும் வகையில் பயன்படுத்துகிறது.

மாதக் குறியீடு:

A- JANURUARY
B- FEBRUARY
C- MARCH
D- APRIL
E- MAY
F- JUNE
G- JULY
H- AUGUST
J- SEPTEMBER
K- OCTOBER
L- NOVEMBER
M- DECEMBER

ஆண்டு குறியீடு:

A- 2010
B- 2011
C- 2012
D- 2013
E- 2014
F- 2015
G- 2016
H- 2017
J- 2018
K- 2019

உதாரணமாக, டாடா மோட்டார்ஸ் கார் ஒன்றில் 10 வது எழுத்து A என்றும் 12 வது எழுத்து D என்றும் இருந்தால், அந்த கார் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தயாரிக்கப்பட்ட கார் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். பிற நிறுவனங்கள் எந்த வரிசையில் ஆண்டு, மாத விபரங்களை வின் நம்பர் வரிசையில் எந்த இடத்தில் குறிப்பிடுகின்றன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்
சீதாப்பழத்தில் இத்தனை விஷயமா !!!! (நோனா பழம் )


சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிற

செலவில்லாமல் வெள்ளை மாளிகையை சுற்றிக் காட்டும் கூகுள்!


செலவில்லாமல் வெள்ளை மாளிகையை சுற்றிக் காட்டும் கூகுள்!

Google Launching White House Virtual Tours



















அமெரிக்கா ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை இருந்த இடத்தில் இருந்தே பார்க்க கூகுளின் புதிய ஏற்பாடு. அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை பார்க்க வேண்டும் என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும்.
இது போன்ற ஆசைகள் நிறைவேர வழியே இல்லை என்று தான் அனைவரும் நினைப்போம். ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகையை, கூகுள் ஆர்ட் ப்ராஜெக்ட் இணையதளத்தின் மூலம் எளிதாக பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது கூகுள்.

வெள்ளை மாளிகை என்பது தலைவர்களுக்கு மட்டும் அல்ல, பொதுவான மக்களுக்கும் சேர்த்து தான் என்று மிஷேல் ஒபாமா வீடியோ மூலம் தெரிவித்து இருக்கிறார்.

360 டிகிரி ஸ்ட்ரீட் வியூ கேமரா தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி கூகுள் இந்த வசதியினை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொழில் நுட்பத்தினை மூலம் பார்ப்பவையை மிக தத்ரூபமாக பார்க்க முடியும். நிஜமாகவே பயனித்து பார்ப்பதை போலவும் உணர முடியும்.

அசாத்தியமான விஷயங்களையும் கூகுள் சாத்தியப்படுத்திவிடுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்து காட்டு இல்லை என்றே கூறலாம். பல ரகசியங்களை உள்ளடக்கியது அமெரிக்கா ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை. இதை பார்க்கும் வாய்ப்பை கூகுள் ஏற்படுத்தி இருப்பது ஓர் அற்புதமான விஷயம் தான்.

கூகுளில் வெள்ளை மாளிகையை சுற்றி பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

http://www.googleartproject.com/collection/the-white-house/museumview/

ஏப்-1: நடிகைகளைப் பார்க்க மலையேறி ஏமாந்த 6,000 பேர்!

ஏப்-1: நடிகைகளைப் பார்க்க மலையேறி ஏமாந்த 6,000 பேர்!

பிரபல நடிகைகள்











பெங்களூர்: பெங்களூரில் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினத்தையொட்டி எப்.எம்.சேனல் ஒன்று 6 ஆயிரம் பேரை மலையேற வைத்து ஏமாற்றியுள்ளது.

ஏப்ரல் முதல் தேதியான ஞாயிற்றுக்கிழமை  மற்றவர்கள் செய்தது போல் அல்லாமல், வித்தியாசமான முறையில் மக்களை முட்டாளாக்க, பெங்களூரைச் சேர்ந்த எப்.எம். சேனல் ஒன்று முடிவு செய்தது. எனவே வித்தியாசமாக யோசித்து கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தங்கள் எப்.எம். சேனலின் புதிய ஸ்டூடியோ நந்தி ஹில்ஸ்சில் அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை காலையில் திறப்பு விழா நடக்கிறது.

இதில் பிரபல நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பிபாஷா பாசு, கத்ரினா கைப் உள்பட பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று அறிவித்தது. நந்தி ஹில்ஸ் பெங்களூரில் இருந்து 54 கி.மீ. தொலைவில் உள்ள சிக்பல்லபூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இந்த ஹில்ஸ்சின் உச்சியில்தான், புதிய ஸ்டூடியோ திறக்கப் போவதாக எப்.எம். சேனல் அறிவித்தது. நடிகைகளை பார்க்கப் போகும் ஆர்வத்தில் மக்கள் சிந்திக்க மறந்தனர். ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 1ம் தேதி அது முட்டாள்கள் தினம். அன்றைய தினத்தில் ஸ்டூடியோ திறக்கப் போவதாகவும், பிரபல இந்தி நடிகைகள் கலந்து கொள்ளப்போவதாகவும் எப்.எம். சேனல் அறிவித்துள்ளதே. அது உண்மையாக இருக்குமா? முட்டாளாக்கும் முயற்சியா? என்று உறுதிப்படுத்திக் கொள்ள பலரும் முயற்சிக்கவில்லை.

குவிந்த மக்கள் கூட்டம்

நேற்று அதிகாலை 6 மணிக்கு நந்திஹில்ஸ் அடி வாரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி விட்டனர். இந்த நந்திஹில்ஸ் (நந்திகுன்று) தோட்டக் கலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. டிக்கெட் வாங்கிக் கொண்டு தான் மேலே செல்ல வேண்டும். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. அலுவலகத்தை திறக்க வந்த தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு இவ்வளவு கூட்டத்தை பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மற்ற நாட்களை விட, சற்று அதிகமாக கூட்டம் இருப்பது உண்டு. ஆனால், சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு நேற்று கூட்டம் நீண்ட கியூவில் நிற்பதை பார்த்து, ஆச்சரியப்பட்டு போனார்கள். டிக்கெட் வாங்கிக் கொண்டு 6000-ம் பேருக்கு மேல் நந்தி ஹில்ஸ்-ன் உச்சிக்கு சென்றனர். அங்கு போன பிறகுதான் இவர்களுக்கு தாங்கள் முட்டாளாக்கப்பட்டது தெரிந்தது. நந்தி ஹில்ஸ் உச்சியில் ஸ்டூடியோவோவும் இருக்க வில்லை. நடிகைகள் வருவதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை.

தாங்கள் முட்டாளாக்கப்பட்டதை உணர்ந்த அவர்கள் ஏமாந்த விஷயத்தை காட்டிக் கொள்ளாமல், ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்தனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், பலர் குடும்பத்துடன் வந்திருந்ததுதான். சமானியர்கள் மட்டுமே ஏமாந்தனர் என்றில்லை. கல்லூரி மாணவர்கள், சாப்ட்வேர் என்ஜினீயர்கள், இளம் ஜோடிகள் என பல தரப்பினரும், நடிகைகளை பார்க்கும் ஆர்வத்தில் வந்து ஏமாந்து போனார்கள்.

ஜோரான வசூல்
நுழைவுக் கட்டணம். வாகன நிறுத்த கட்டணம் என்ற வகையில், தோட்டக்கலை துறைக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3 மணி நேரத்தில் ரூ. 70 ஆயிரம் வருமானம் கிடைத்தது. குறுகிய காலத்தில் அந்த பகுதியில் ஏராளமானோர் கூடியதால், ஹில்ஸ் பகுதியில் போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் மிகவும் சிரமப்பட்டு போனார்கள்.

கும்பகோணம் அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி

கும்பகோணம் அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி


சோழ மன்னர்களின் முதன்மைநகரான நமது ஊர் ( கும்பகோணம் ) அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி.

நாம் அறியாத பல சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக்கொண்டுள்ளது.

நமது ஊர்( கொரநாட்டு கருப்பூர் ) அருகில் உள்ள மனஞ்சேரி என்ற அழகிய கிராமத்தில் உள்ளதர்ஹாவை பற்றியவரலாறு தகவல் அறிந்தவர்கள் விரும்பினால் கமெண்ட்ஸ் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த போரில் கலந்துகொண்டவர்கள் அடக்கஸ்தலம்மாக இருக்க

வாய்பு உள்ளது.ஏன் என்றால் இந்த அடக்கஸ்தலதை காணும் போது

மரணம் அடைந்த பலஉடலை ஒரு இடதத்தில் அடக்கசெய்தது

போல் உள்ளது.இந்த அடக்கஸ்தலதை கண்டவர்களுக்கு புரியும்