உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

... எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...

நடுத்தர மக்களுக்கு புதிய HP LAPTOP


சமீபத்தில் எச்பி தனது புதிய நெட்புக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய நெட்புக்கிறக்கு HP மினி 210 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய நெட்புக் பல ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது. விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த நெட்புக் இன்டல் ஆட்டம் N2800 1.86 GHZ ப்ராசஸரையும் 320 GB சாட்டா HDD கொண்டிருக்கிறது. 1024 x 600 பிக்சல் ரிசலூசன் கொண்ட டபுள்யுஎஸ்விஜிஎ எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேயை இந்த நெட்புக் வழங்குகிறது.

மேலும் இன்டல் என்எம் 10 + ஐசிஎச்8எம் சிப்சட் மற்றும் 2GB 1333 MHz DDR3 RAM இந்த நெட்புக் தாங்கி வருகிறது.

இந்த நெட்புக் மல்டிமீடியா வசதி கொண்டது. அதற்காக இந்த நெட்புக் மல்டி பார்மட் டிஜிட்டல் மீடியா கார்டு ரீடர், இன்டக்ரேட்டட் டிஜிட்டல் மைக்ரோபோன், எர்த்நெட், ப்ளூடூத், இன்டல் க்ராபிக்ஸ் மீடியோ அக்சிலரேட்டர், வெப்காம் மற்றும் வைபை போன்ற ஏராளமான வசதிகளையும் இந்த நெட்புக் வழங்குகிறது.

இதன் எடை 1.34 கிலோ மட்டுமே. அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இது பல நிறங்களில் வருகிறது. மேலும் இந்த நெட்புக் ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன் போன்றவற்றையும் சப்போர்ட் செய்கிறது.

மின்திறனிற்காக இந்த நெட்புக் 6 செல் லை பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 8.75 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இன்டர்நெட்டை இந்த நெட்புக்கில் மிக வேகமாக ப்ரவுஸ் செய்ய முடியும். கேமிங் வசதிகளும் இந்த எச்பி நெட்புக்கில் அமர்க்களமாக இருக்கின்றன. மேலும் இந்த நெட்புக் எச்பி லைப் டைம் சப்போர்ட் அசிஸ்டண்ட் கைசதியுடன் வருகிறது.

 இந்த நெட்புக் 1வருடம் உத்திரவாதாத்துடன் கிடைக்கும்
இந்த புதிய நெட்புக்கின் விலை ரூ.17500/- மட்டுமே. அதனால் இந்த நெட்புக் விற்பனையில் சாதனை படைக்கும் என நம்பலாம்.
 
இந்த புதிய லேப்டாப்யை வாங்க தொடர்பு கொள்ள  வேண்டிய   முகவரி:
 
 
M/s. GLOBAL SYSTEMS,



No.31A,1st Floor,Advaitha Ashram Road, Opp.Gokulam,Near New Busstand,


Salem-636004, Mobile: +91 98427 33339 & 99940 33339


Phone: +91-427-4042339, E-MAIL : globalsystemscare@gmail.com


Web : www.globalsystems.co.in

உங்களது சிந்தனையை தூண்டும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ...

உங்களது சிந்தனையை தூண்டும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ...சாதாரணமாக பார்க்காமல் உங்கள் மூளைக்கு வேலைகொடுத்து சிந்தியுங்கள் புலப்படும்









































காரில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்கான வழிமுறைகள்

Fuel Saving Tips

விண்ணை முட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் கார், பைக் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டமாகி வருகிறது. இந்த நிலையில், சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் எரிபொருளை அதிக அளவில் மிச்சப்படுத்த முடியும். பாக்கெட்டுக்கும் பங்கம் வராது.


காரில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக செய்ய வேண்டியது என்ன?, அதன்மூலம் எவ்வளவு சதவீதம் எரிபொருள் மிச்சமாகிறது என்பது குறித்த விபரங்களை இங்கே காணலாம்.

ப்ளான் பண்ணி போகணும்:


தினசரி செல்லும் இடங்களை தவிர பிற இடங்களுக்கு செல்லும்போது திட்டமிட்டு சரியான வழியை தேர்ந்தெடுத்து செல்வதன் மூலம் 15 சதவீதம் எரிபொருளை சேமிக்க முடியும். சற்று தொலைவு அதிகமாயினும் நல்ல ரோடாக தேர்ந்தெடுத்து செல்வது முக்கியம்.

கூடுதல் எடை:

காரின் டிக்கியில் அளவுக்கு அதிகமாகவும், தேவையில்லாத பொருட்களையும் ஏற்றுவதை தவிர்க்கவும். இதன்மூலம், 15 சதவீதம் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.

கதவு கண்ணாடி:

கார் கதவு கண்ணாடிகளை திறந்து வைத்து செல்வதை தவிர்க்கவும். இதனால், காரின் முன்னோக்கி செல்லும் திறன் காற்றால் பாதிக்கப்படும். இதேபோன்று, காரின் மேற்கூரையில் அதிக அளவு பொருட்களை ஏற்ற வேண்டாம். இதன்மூலம், 27 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.

கிளட்ச், பிரேக்:

கிளட்ச், பிரேக்கை சிலர் பிடித்துக்கொண்டே ஓட்டுவர். இதை தவிர்ப்பதுடன் தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், 18 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.

வேகம் விவேகமல்ல:

காரோ, பைக்கோ மிதமான வேகத்தில் ஓட்ட பழகிக்கொள்ளுங்கள். அலுவலகமாயினும், பிற இடங்களுக்கு செல்வதாயினும் 15 நிமிடம் முன்கூட்டியே கிளம்புங்கள். இதன்மூலம், 15 சதவீத எரிபொருள் மிச்சமாவதோடு, தேவையில்லாமல் பதட்டப்பட்டு வாகனத்தை ஓட்ட வேண்டி இருக்காது.

எரிபொருள் தரம்:

எரிபொருளின் தரம் மைலேஜுக்கு அதிக முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, தரமும், சரியான அளவு தரும் ஒரே பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புங்கள். இதன்மூலம், 10 சதவீதம் வரை எரிபொருள் மிச்சமாகும்.

சிக்னல்:

சிக்னல்களில் நிற்கும்போது 35 வினாடிகளுக்கு மேல் நிறுத்த வேண்டிய அவசியம் இருப்பின், கண்டிப்பாக எஞ்சினை ஆஃப் செய்து விடவும். இதனால், 4 சதவீதம் வரை எரிபொருளை மிச்சப்படுத்தலாம். குறிப்பாக, கார்கள் ஐடிலிங்கில் இருக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒரு லிட்டர் எரிபொருள் செலவாகும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

ஏசி:
தேவையில்லாதபோது ஏசியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏசியால் எஞ்சினுக்கு கூடுதல் பளு ஏற்படுவதால் அதிக எரிபொருள் செலவாகும். ஏசியை தேவையானபோது மட்டும் பயன்படுத்தினால் 10 சதவீதம் அளவுக்கு எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.

பத்திரமா பார்த்துக்குங்க:
கார் நிறுவனத்தின் கையேட்டில் கொடுத்துள்ளவாறு சரியான இடைவெளிகளில் காரை சர்வீஸ் செய்துவிடவும். எஞ்சின் ஆயில் மற்றும் டயர்களில் காற்றின் அழுத்தம் ஆகியவற்றை அவ்வப்போது செக்கப் செய்து விடவேண்டும். இதன்மூலம், 8 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.