ரூம் போட்டு யோசிபார்களா ?

  1. Photo: அமெரிக்காவின் சார்லோட் நகரத்தில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் விலையுயர்ந்த சிகார் (சுருட்டு) பண்டில் ஒன்றை வாங்கினார். அதற்கு இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டு, அவரே அத்தனை சுருட்டையும் புகைத்துத் தள்ளிவிட்டார்! அதன்பிறகு நெருப்பால் தன்னுடைய சுருட்டு அழிந்துபோய்விட்டதாகக் கூறி இன்ஷூரன்ஸில் கிளைம் செய்தார்!  

இன்ஷூரன்ஸ் கம்பெனி காப்பீடு தர மறுக்க, விவகாரம் கோர்ட்டுக்குப் போனது! என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தாலும், வழக்கு முடிவு என்னவோ வழக்கறிஞருக்குச் சாதகமாகவே வந்தது. காரணம், இன்ஷூரன்ஸ் விதிமுறையில், 'இன்ஷூரன்ஸ் செய்யப்படும் பொருட்களுக்கு நெருப்பினால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு உண்டு’ என்றிருந்ததுதான். கடைசியில் சுருட்டையும் குடித்துவிட்டு, இழப்பீடாக 15,000 டாலரையும் சுருட்டிவிட்டார் அந்த ஆசாமி!

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமே இனி வருவதுதான். இழப்பீடைக் கொடுத்த கையோடு அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழக்கறிஞர் மீது ஒரு கேஸைப் போட்டது. அதாவது தங்களால் காப்பீடு செய்யப்பட்ட ஒரு பொருளை அவர் தீ வைத்து சேதப்படுத்தி விட்டார் என்று வழக்குப் போட்டது. கோர்ட்டும் விசாரித்துவிட்டு அவருக்கு 24,000 டாலர் அபராதம் விதித்ததோடு இரண்டு வருட சிறைத் தண்டனையும் கொடுத்து விட்டது.

தன் மீது தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதை நினைத்து நொந்தே போனார் அந்த வழக்கறிஞர்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!

(நாணயம் விகடன் 2011 )
    1. அமெரிக்காவின் சார்லோட் நகரத்தில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் விலையுயர்ந்த சிகார் (சுருட்டு) பண்டில் ஒன்றை வாங்கினார். அதற்கு இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டு, அவரே அத்தனை சுருட்டையும் புகைத்துத் தள்ளிவிட்டார்! அதன்பிறகு நெருப்பால் தன்னுடைய சுருட்டு  எ ரிந்து போய்விட்டதாகக் கூறி இன்ஷூரன்ஸில் கிளைம் செய்தார்! 
       
      இன்ஷூரன்ஸ் கம்பெனி காப்பீடு தர மறுக்க, விவகாரம் கோர்ட்டுக்குப் போனது! என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தாலும், வழக்கு முடிவு என்னவோ வழக்கறிஞருக்குச் சாதகமாகவே வந்தது. காரணம், இன்ஷூரன்ஸ் விதிமுறையில், 'இன்ஷூரன்ஸ் செய்யப்படும் பொருட்களுக்கு நெருப்பினால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு உண்டு’ என்றிருந்ததுதான். கடைசியில் சுருட்டையும் குடித்துவிட்டு, இழப்பீடாக 15,000 டாலரையும் சுருட்டிவிட்டார் அந்த ஆசாமி!

      இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமே இனி வருவதுதான். இழப்பீடைக் கொடுத்த கையோடு அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழக்கறிஞர் மீது ஒரு கேஸைப் போட்டது. அதாவது தங்களால் காப்பீடு செய்யப்பட்ட ஒரு பொருளை அவர் தீ வைத்து சேதப்படுத்தி விட்டார் என்று வழக்குப் போட்டது. கோர்ட்டும் விசாரித்துவிட்டு அவருக்கு 24,000 டாலர் அபராதம் விதித்ததோடு இரண்டு வருட சிறைத் தண்டனையும் கொடுத்து விட்டது.

      தன் மீது தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதை நினைத்து நொந்தே போனார் அந்த வழக்கறிஞர்.

      எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!

      (நன்றி : நாணயம் விகடன் 2011 )

3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப கல் ஆயிருச்சு

  • பல இடங்கள் நமக்கு பக்கத்திலேயே இருக்கும் ஆனால் மற்றவர்கள் சொல்லி தான் நமக்கு தெரியும். தெரியும் போது 'அட' என்று நினைப்போம். அப்படி பட்ட இடம் ஒன்று சென்னைக்கு அருகிலேயே இருக்கிறது. ஆம், சென்னைக்கு பக்கத்தில…. ஒரு 100 கிலோ மீட்டர்ல…. இருக்கும் ஒரு மர்மமான இடம் பற்றிய தகவலே இது….

அப்படியா, என யோசிப்பவருக்கு…. ஒரு கேள்வியுடன் தொடங்குவோமே…
உலகம் தோன்றி எவ்வளவு காலமாச்சு
அது இருக்கும், கோடி வருசங்களுக்கு மேல…

ம்… அப்படி 3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப இருக்குது….பெரும்பாலான சென்னை வாசிகளுக்கும் ஏன் பாண்டிச்சேரி வாசிகளுக்கும் கூட தெரியாம ஒரு கிராமத்துக்குள்ள இன்னும் இருக்குது… இத்தனைக்கும் இந்த மரங்களை நாம் பார்க்கலாம், ஃபோட்டா எடுத்துக்கலாம்…. ஏன் தொட்டுக் கூட பாக்கலாம்…
3000 கோடி வருசத்துக்கு முந்தியது எனும் போது, மரம் மக்கி போகாது என சிந்திப்பவருக்கு, இல்லை.. மக்கி போனால் அதுதான் பெட்ரோல் அண்டர் கிரவுண்டுல ஆக்சிஜன் கிடைக்காம போச்சுன்னா பிட்டிரைஃபைட்டு ஆகிவிடும். அதனால மரம்………. இப்ப கல் ஆயிருச்சு…
வாட்… கல்லாச்சா…
யெஸ்… மரம் ஒரு ஆர்க்கானிக் காம்பணெண்ட் இல்லியா… அதனோட தன்மைகள் சுத்தமா போயி, இப்ப சில்லிக்கான் செல்களா இருக்குது…..
திருவக்கரை, இதுதான் இந்த கல்லால மரம் இருக்கும் ஊரின் பெயர். வக்கர காளியம்மன் எனும் கோவில் அலங்கரிக்கும் ஊர் கூட இதுதான். ஆகம விதிப்படி அமைக்கப்படாத ஒரு கோவில் உண்டு என்றால் ….. கோவில்ன்னா இப்படி இருக்கணும் என்ற விதிக்கு …. சொன்னதற்கு நேர் மாறாக கோவில் அமைக்கப்பட்டது இங்காகத்தான் இருக்க வேண்டும்.
மூலவர் என சொல்லப்படும் கோவிலின் சாமி சிலைக்கு எதிரில் நந்தி அமைப்பது ஒரு ஆகம விதி. ஆனால்………. இங்குள்ள கோவிலில் நந்தி திரும்பி கொண்டிருக்கும். எல்லா கோவில்களிலும் இடம் வலமாய் சுற்றி வந்தால் இங்கு மாறி சுற்ற வேண்டி வரும்.
ஆதிச்ச சோழனால் கட்டப்பட்டு, மாணிக்க வாசகரால் பாடப்பட்ட இத்தலம், இன்றும் மக்களின் பெருங்கூட்டத்தால் அம்மாவாசை பௌர்ணமிக்கு திணறுகிறது. சில கிரகங்களின் வக்கிர பார்வைக்கு இந்த கோவில் வந்து எலிமிச்சை மாலை சாத்தினால் பரிகாரம் உண்டு என நம்பப் படுகிறது. மிக பிரசித்தியான தலம்.
இக்கோவிலின் உள்ளே, குண்டலினி சித்தர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் இருக்கிறது, அந்த இடத்தில் தியானம் செய்ய அமர்ந்தால் மனம் ஒருமைப்படுவதை வியக்காமல் இருக்க முடியாது… எப்படி எப்படி.. இப்படி என மனம் மிரள வைக்கும் ஒரு அதிர்வை எளிதில் உணரலாம்… பிரணவ மந்திர மூம்மூர்த்திகளும் ஒரே சிவலிங்கத்தில் இருப்பது உலகிலேயே இங்குதான்.
ம்… இந்த கோவில் ஏன் இப்படி இருக்கிறது….. சொல்வதற்கு ஆதாரமில்லை என்றாலும்… இக்கோவில் நாட்டார் வழிபாடு செய்யப்பட்டு பின்னர் சிவ வழிபாடு… அரக்கனை அழித்தது… என அரசியலாகி மாற்றப்பட்டது……… என உள்ளுணர்வு சொல்லும்….
கல்லால மரம் இந்த ஊரில் இருப்பதும்…. இவ்வூரின் கோவில் வக்கிர சித்தரிப்புக்கும் ஒரு ஆழமான காரணம் இருக்க வேண்டும். ஒரு ஆழ்ந்த தொடர்பும் இருக்க வேண்டும். அதில் இருக்கும் ஒரு ரகசிய தொடர்ப்பில் ஏதோ ஒரு சுவாரசியம் இருக்க வேண்டும்… என்றாலும் ஆழமான ஆராய்ச்சி செய்யும் யாராவது செய்ய வேண்டிய பணி இது….
கல்லால மரம் இருக்கும் திருவக்கரை சென்றால், கொஞ்சம் பாறைகள், கொஞ்சம் குன்றுகள் என்றாலும் வளப்பமான மரங்களும் நம்மை வரவேற்க்கும்.சுற்றி வேலி அமைக்கப்பட்டு, அந்த பூங்கா அழகுடனும் அமைதியாகவும் இருந்தது. அதனுள் தான் அந்த கல்லாலமரம் இருக்கிறது.
அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு, பொது மக்களுக்காக திறந்து விடப்பட்ட சிறு நிலப்பரப்பு ரகசியங்களை தரிசிக்க சொல்லி நம்மை வரவேற்க்கும்.
நுழைந்த உடனேயே சிவப்பு வண்ணத்தில் மரம் கண்ணுக்கு படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல…. நிறைய நிறைய மரத் துணுக்குகள்…. அதில் ஒரு நீண்ட கல்லால மரம் இருக்கிறது. அதன் நீளம் சுமார் 50 அடி….
‘இந்த மரத்தோட வயசு 3,000 கோடி வருசமா….
தொட்டு பார்த்த போது, மயிர்க்கால்கள் குத்திட்டன. ஏய்… மரமே உன் வயது கோடிகளிலா… கொஞ்சம் பேசேன்.. நீ பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. நீ எப்படி வாழ்ந்தாய்… நீ வாழ்ந்த காலத்தில் பூமி எப்படி இருந்தது.
உன் காலத்தில் எல்லாம் இங்கு சமுத்திரமாமே… அப்படியா… ஐஸ் ஏஜ் என சொல்கிறார்களே அப்படி என்றால் எப்படி…. நீ வாழ்ந்த காலத்தில் மனிதனே இல்லையாமே…. டைனோசர் எனும் ராட்சத விலங்குகள் தானாமே அப்படியா… புராணங்கள் சொல்வதை கேட்டு, இங்குள்ள வாயிற் காப்போன் சொல்கிறார்… ‘அந்த காலத்தில இங்கு வாழ்ந்தவர் பூரா அரக்கர்கள் என்று….’ அப்படியா….
யார் யார் இங்கு வசித்தார்கள். உனக்கு தெரியும் உண்மையை உரக்க சொல்லேன்…
கல்லாகி போன இந்த மரங்கள் இங்குள்ளவை அல்ல…. அதன் வேர்களோ, இலைகளோ அல்லது, அதன் ஒடிந்த கிளைகளோ இங்கு இல்லை… இவையெல்லாம் எங்கிருந்தோ இங்கு வந்து கொட்டப்பட்டிருக்கிறது… எப்போது… எந்த காலத்தில்………….
கேள்வி இருக்கிறது…. பதில் சொல்ல யாருமே இல்லை…. ஹும்… 2 கோடி வருசங்களுங்கு முன்னால்… இப்படி 2 கோடி வருசங்களுக்கு இங்கு வந்து கொட்டியவர்கள் யார்… மனிதனா…. அரக்கனா…. அல்லது டைனோசரா….

நமக்கு தெரிந்தது இந்த தகவல் மாத்திரமே… 18ம் நூற்றாண்டில் ஒரு ஐரோப்பியர் கண்டுபிடித்து இப்படி கல்லாகி போன ஒரு மரத்தின் துண்டுகள் இங்கே கொட்டி கிடப்பது பற்றி கண்டுபிடித்து எழுத…. ஆராய்ச்சி குழு இங்கே வந்து 100 வருசமாக ஆராய்ச்சி செய்ததில் நாம் கண்டுபிடித்தது இவ்வளவே…
1. இந்த கல் மரத்தின் தன்மையில் ஆர்கானிக் இல்லை இல்லவே இல்லை… முழுக்க முழுக்க சிலிக்கான் தன்மைகளே உள்ளன.
2. இந்த கல் மரத்தின் ஆயூள் 3000 கோடி வருசம்
3. இந்த கல் மரம் இந்த பகுதியை சேர்ந்தது அல்ல, எங்கோ இருந்ததை யாரோ கொண்டு கொட்டி வைத்திருன்ந்தார்கள்…
4. கொண்டு கொட்டிய வருசம்…. 2 கோடி வருசங்கள்
5. யார் கொண்டு வந்து கொட்டியது………. ஏன் இங்கு வந்து கொட்டி வைத்தார்கள்… என்ன செய்வதாக உத்தேசம்…. ம்…ஹூம்.. தெரியவில்லை… அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை
6. 10 வருடங்களுக்கு முன்னால் இங்கு வந்து ஐரோப்பாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பத்தடி தோண்டி, மணல்களை சேகரித்து சென்றிருக்கிறது. சேகரித்த மண் தங்கம் போல மின்னியதாகவும் … ஆராய்ச்சியின் தகவல் பற்றி ஏதும் தெரியவில்லை எனவும் தகவல்கள்.
கேள்விகள் ஓராயிரம் உண்டு, விடைகள் சொல்லத்தான் யாருமில்லை…. வெறும் 2000 வருசத்து சரித்திரமே தரிகிணத்த்தோம்… போட்டு… தெளிவாகத் தெரியாமல் விழிக்கின்ற சிறு புல் நாம்… நம் முன்னோர்களை பற்றியோ, இந்த பூமியை பற்றியோ எதுவும் அறியாத சிறு பாலகர்கள் நாம்…

எல்லாம் எமக்கு தெரியும்… என இறுமாப்பு கொள்ளும் நம் இன்றைய ஈகோவை பார்த்து பல் இளிக்கவாவது இந்த திருவக்கரைக்கு ஒரு பயணம் மேற்கொள்ளலாம்…
    பல இடங்கள் நமக்கு பக்கத்திலேயே இருக்கும் ஆனால் மற்றவர்கள் சொல்லி தான் நமக்கு தெரியும். தெரியும் போது 'அட' என்று நினைப்போம். அப்படி பட்ட இடம் ஒன்று சென்னைக்கு  இருக்கிறது. ஆம், சென்னைக்கு பக்கத்தில…. ஒரு 100 கிலோ மீட்டர்ல…. இருக்கும் ஒரு மர்மமான இடம் பற்றிய தகவலே இது….

    Thanks: Facebook Friends

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதாஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடைஅந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா 
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். 
இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது.இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கினபரோட்டாவும் பிரபலமடைந்தது. 
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?மைதா மாவுல உப்பு போட்டுதண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டுஉருட்டிஒவ்வொரு உருண்டையையும் தட்டிஅடித்துபெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டுஅதை அப்படியே சுருட்டிதிரும்ப வட்ட வடிவில் உருட்டிதோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல
மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்
இதில் சத்துகள் எதுவும் இல்லை
குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,
மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்
.
தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

  • பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!. 

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!! 

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. 

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
    பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

    மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந...
    ்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.