அமெரிக்காவின் சார்லோட் நகரத்தில் இருந்த
வழக்கறிஞர் ஒருவர் விலையுயர்ந்த சிகார் (சுருட்டு) பண்டில் ஒன்றை வாங்கினார்.
அதற்கு இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டு, அவரே அத்தனை சுருட்டையும் புகைத்துத்
தள்ளிவிட்டார்! அதன்பிறகு நெருப்பால் தன்னுடைய சுருட்டு எ ரிந்து போய்விட்டதாகக் கூறி இன்ஷூரன்ஸில் கிளைம்
செய்தார்!
இன்ஷூரன்ஸ் கம்பெனி காப்பீடு தர மறுக்க, விவகாரம் கோர்ட்டுக்குப்
போனது! என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தாலும்,
வழக்கு முடிவு என்னவோ வழக்கறிஞருக்குச் சாதகமாகவே வந்தது. காரணம், இன்ஷூரன்ஸ்
விதிமுறையில், 'இன்ஷூரன்ஸ் செய்யப்படும் பொருட்களுக்கு நெருப்பினால் சேதம்
ஏற்பட்டால் இழப்பீடு உண்டு’ என்றிருந்ததுதான். கடைசியில் சுருட்டையும்
குடித்துவிட்டு, இழப்பீடாக 15,000 டாலரையும் சுருட்டிவிட்டார் அந்த
ஆசாமி!
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமே இனி வருவதுதான். இழப்பீடைக்
கொடுத்த கையோடு அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழக்கறிஞர் மீது ஒரு கேஸைப் போட்டது.
அதாவது தங்களால் காப்பீடு செய்யப்பட்ட ஒரு பொருளை அவர் தீ வைத்து சேதப்படுத்தி
விட்டார் என்று வழக்குப் போட்டது. கோர்ட்டும் விசாரித்துவிட்டு அவருக்கு 24,000
டாலர் அபராதம் விதித்ததோடு இரண்டு வருட சிறைத் தண்டனையும் கொடுத்து
விட்டது.
தன் மீது தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதை நினைத்து நொந்தே
போனார் அந்த வழக்கறிஞர்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
பாருங்க!
(நன்றி : நாணயம் விகடன் 2011 )