அரசு அதிகாரிகள் உணர்வார்களா :அனைவரும் காணவேண்டிய வீடியோ

அரசு அதிகாரிகள்உணர்வார்களா : அனைவரும் காணவேண்டிய வீடியோ
















இது ஒரு குறும்படம் .அரசு அதிகாரிகளும் மக்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது .
இது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப் பட்டுள்ளதால் புரிந்து கொள்ள வசதியாக வீடியோவில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளை தமிழில் தருகிறேன் .

மின் வாரிய அதிகாரிக்கு ஒரு தொலைப் பேசி அழைப்பு வருகிறது

அழைத்தவர் : அய்யா நான் கணேஷ் நகர் மூன்றாவது சந்திலிருந்து பிரசாந்த் பேசுறேன் ...எங்க ஏரியாவுல நாலஞ்சி நாளா தெரு விளக்கு எரியல சார் ....

அதிகாரி : இதுக்கு முன்னாடி வேற யார்கிட்டாயாவுது புகார் சொல்லியிருக்கீங்களா ?

அழைத்தவர் : பல தடவை சொல்லியாச்சி சார் ...நாலு நாள் ஆவுது இது வரைக்கும் யாரும் வரல .....

அதிகாரி : அரசு அதிகாரிகளுக்கு பல வேலைகள் இருக்கும் அதனால் எதையும் உடனடியாக செய்து விடமுடியாது

அழைத்தவர் : எங்க ஏரியா ரொம்ப நெரிசலான இடம் சார்... எல்லாருமே ரொம்ப சிரமப் படுறோம் ...தயவு செஞ்சி கொஞ்சம் சீக்கிரமா பாருங்க சார் ....

அதிகாரி : சரி செய்கிறோம்

சிறிது நேரத்தில் ஒரு மின்வாரிய ஊழியர் வந்து தெரு விளக்கை சரி செய்கிறார் .சரி செய்தவுடன் அருகிலுள்ள ஒரு பூத்திலிருந்து மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்கிறார்

மின் வாரிய ஊழியர் :ஹலோ ..சூரி சாரா ..நான் பார்த் பேசுறேன் ...லைட்ட சரி பண்ணியாச்சி ...ரொம்ப சின்ன ரிப்பேர்தான் ...ஒரு நிமிஷத்துல முடிஞ்சிடுச்சி


இப்போது பூத் உரிமையாளர் மின்வாரிய ஊழியரிடம் கேட்கிறார்


பூத் உரிமையாளர் : லைட்டு இப்போ நல்லா எரியுதா சார் ?

மின் ஊழியர் : ஆம் ...நல்லா எரியுது .....எவனோ தெரியல நாலஞ்சி நாளா லைட்டு எரியலன்னு அடிக்கடி போன் பண்ணி ஒரே இம்சை ...

பூத் உரிமையாளர் :உங்களுக்கு இம்சை குடுத்த அந்த முட்டாள் இப்போ உங்க முன்னாடிதான் சார் இருக்கான் ...

மின் ஊழியர் :ஓ ..நீங்கதானா அது ...சரி போன் பேசியதற்கு காசு எவ்வளவு ?

பூத் உரிமையாளர் : காசெல்லாம் வேண்டாம் சார் எங்க தெருவுக்கு எவ்வளவு பெரிய நன்மை செஞ்சிருக்கீங்க ...

மின் ஊழியர் : இது என் காசு டையாதுய்யா ...அரசாங்கத்தோடது ...   சும்மா வாங்கிக்க ...

இவ்வாறு கூறி காசை மேஜை மீது வைக்கிறார் .அதை எடுக்க பூத் உரிமையாளர் தடுமாறுகிறார் .அப்பொழுதுதான் பூத் நடத்துபவருக்கு பார்வை கிடையாது எனும் விஷயம் மின் ஊழியருக்கு தெரிய வருகிறது


மின் ஊழியர் : ஏம்யா ...உனக்கு கண் தெரியாதா ?

பூத் உரிமையாளர் :ஆமா சார் எனக்கு துப்பரவா கண் தெரியாது ..

மின் ஊழியர் : கண் தெரியாத நீ ஏம்யா லைட் எரியலங்கிறதுக்காக அடிக்கடி போன் பண்ணுன ?

பூத் உரிமையாளர் : ஏன்னா ...வெளிச்சம் இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டம்ங்கிறது எனக்குதானே தெரியும் .