ஒரு வயதான தாய் தன் மகனுக்கு இப்படியாக கடிதம் எழுதுகிறார்....

ஒரு வயதான தாய் தன் மகனுக்கு இப்படியாக கடிதம் எழுதுகிறார்....







அன்புள்ள மகனே !


நலமா? ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________ .


அன்று உன் விரல்பிடித்து


நடக்க செய்த


அதே ஸ்பரிசத்தோடே.....


இன்று பேனாபிடித்து


எழுதுகிறேன்.....




இந்த கடிதத்தை


உன் மகனுக்கு தெரியாமல்படி..


நீயும் பிற்காலத்தில்


இப்படி எழுதமலிருக்க....



உன்னை சபிப்பதோ...


என் துயரங்களை சொல்வதோ...


இக்கடிதத்தின் நோக்கமல்ல...


உன் தாய் என்று கூட‌


பாரபட்சம் பார்க்காமல்


என் கடைசி ஆசையை


தெரிவிப்பதே....




நான் இறந்தப்பிறகு கொல்லியை


தலையில் வைக்காதே...


வயிற்றில் வை....




என் உடலிலே


முதலில் எரியபோகும் உறுப்பு


உன்னை சுமந்த கருப்பையாகதான்


இருக்க வேண்டும்.....




நீ பால்வார்க்க‌


கொடுத்து வைக்காத வயிறு

அஸ்தியாவது கொடுக்கட்டும்....




இந்த கடிதம் எழுதுகிற போது


கையில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது


ஒன்றுமில்லை...


கடந்த ஐந்தாண்டுகளாய் கொதித்த


கண்ணீர்துளி ஒன்று..


கை மீது சிந்திவிட்டது


அதுவே காரணம்......






மகனே .... பெத்தமனம் பித்து


என்பதற்கு சான்றாய்


என் கடைசிவரி...






உன் வீட்டு உணவு தான்


எனக்கில்லை என்றாகிவிட்டது...


ஒருவேளை நீ இந்த கடிதத்திற்கு


பதில் போட்டால்.......


தபால்தலையை எச்சிலால் அல்ல....


ஒரே..... ஒரு ....... சோற்றுப் பருக்கையால்


ஒட்டி அனுப்பு........




இப்படிக்கு


வயதான குழந்தை உன் அம்மா.