முயலுக்கு இன்னொரு கால் எங்கே??


ஐயா நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்?அதன் உண்மையான பொருள் என்ன? என்று கேட்டார்.

நான் சொன்னேன்..

நண்பரே.. அது ஒரு பழங்கதை..

ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம்.ஒருநாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம்.அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம்.

ஆசையில் முயலின் ஒருகாலை அவன் எடுத்துச் சாப்பிட்டுவிட்டானாம்..திரும்பி வந்த குரு கேட்டாராம்..என்னப்பா மூன்று கால்தான் இருக்கிறது இன்னொரு கால் எங்கே என்று..அதற்கு உண்மையை மறைத்து நீங்கள் கொண்டுவந்த முயலுக்கு மூன்றுகால்கள் தான் இருந்தன குருவே என்றானாம்..

என்னப்பா உலகில் மூன்றுகால்களோடு எந்த முயலுமே கிடையாதே என்று கேட்டாராம்.

எப்படிக் கேட்டும் சீடன் உண்மையை மட்டும் சொல்லாமல் தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தானாம்.

கால் போனதைப் பற்றிக்கூடக் கவலைப்படாத குரு.சீடனிடம் உண்மையை எப்படியாவது வரவழைத்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம்.

அவன் தூங்கும் போது நடுஇரவில் எழுப்பிக் கேட்பாராம்..அவன் ஏதாவது வேலை செய்யும் போது கேட்பாராம்..

தம்பி முயலுக்கு எத்தனை கால் என்று..

அவனும் மறக்காமல் தெளிவாகச்சொல்வானாம்..குருவே நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று..

நொந்து போன குரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவேளையில்..

இந்த சீடன் ஒரு திருட்டுவேலைசெய்து வந்ததை இவர் அறிந்தாராம்..

நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு மந்திரத்தைச் சொல்லிய சீடன் யார் கண்களுக்கும் தெரியாமல் அரண்மனைக்குச் சென்று அரச உணவுகளை ஒரு கை பார்த்துவந்தானாம்..

அரண்மனையில் உணவுகள் மாயமாவதை கண்டறியமுடியாமல் தவித்த அரசன் யாராவது இந்தத் திருடனைக் கண்டுபிடித்தால் தக்க பரிசில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டானாம்.

குருவுக்குத் தெளிவாக விளங்கியதாம் இது நம் சீடனின் வேலைதான் என்று..

அரசனிடம் சென்று ஒரு வழிமுறை சொன்னாராம்..

இன்று சுடச்சுட உணவுதயாரித்து அதை மூடிவையுங்கள் இன்று அவன் மாட்டுவான். என்று...

சொன்னதுபோலவே மாயமாக வந்த சீடன் ஆவலாக பாத்திரங்களின் மூடியைத் திறந்தானாம். அப்போது நீராவி வந்து அவன் நெற்றியில் இட்ட திருநீரைக் அழித்துவிட்டதாம். அவனும் எல்லோர் கண்ணிலும் தெரிந்தானாம்.

குற்றம் சுமத்தப்பட்டு தூக்குதண்டனைக் கைதியாக சீடன் நின்றவேளையில்..

அவனருகே சென்ற குரு..

“தம்பி இறுதியாகக் கேட்கிறேன்..உண்மையைச் சொன்னால் உன்னை இந்த மரண தண்டனையிலிருந்து என்னால் காப்பாற்றமுடியும்..முயலுக்கு எத்தனை கால்?“ என்று கேட்டாராம்..

அப்போது கூட மனம் மாறாத சீடன் சொன்னானாம்..

குருவே சத்தியமாக நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று...

அப்போது அந்த குரு ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டாராம்.

இவனிடமிருந்து மட்டும் உண்மையை வரவழைக்கவே முடியாது என்று..

அதனால் தான் இந்த சீடனைப் போல..

தான் சொன்னது பொய் என்றாலும் அதை மறைக்க எத்தனை பொய்வேண்டுமானலும் சொல்லத் தயங்காதவர்களை இந்தப் பழமொழியோடு ஒப்பிட்டு உரைத்துவருகிறோம் என்று விளக்கம் சொன்னேன்..

மகிழ்ந்த என் நண்பர் இதே போல வேறு ஒரு கதை உண்டு என்றார்..

என்ன என்று ஆவலாகக் கேட்டேன்..

அதை கதைபோல குரு தன் சீடனிடம் கொக்கு பிடித்துத் தந்து சமைத்துவைக்க சொன்னார்..

அவனும் சமைத்து அந்தச் சீடனைப் போலவே ஒருகாலை சாப்பிட்டுவிட்டு நீங்கள் தந்த கொக்குக்கு ஒரே கால் தான் என்று சாதித்தான்.

அந்த குருவும் அவனை அழைத்துச் சென்று குளத்தில் நின்ற கொக்கைக் காண்பித்தார்.

அந்தக் கொக்கு ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தது.சீடனோ..

பார்த்தீர்களா குருவே ஒத்தைக் காலில்தானே நிற்கிறது என்றான்..

நொந்துபோன குரு ஒரு கல்லை எடுத்து அதன் மீது எறிந்தார்.

அது பறந்தது. அப்போது குரு இப்போது பார்த்தாயா?இரண்டுகால்கள் தெரிகின்றன என்றார்.

அப்போதும் சீடன்.

“குருவே இப்போதுதான் புரிகிறது.. நீங்க பறக்கும் கொக்கை அடித்திருந்தால் அதற்கு இரண்டுகால்கள் இருந்திருக்கும்..

நீங்கள் என்னிடம் தந்த கொக்கு நிலத்தில் நின்றுகொண்டிருந்த கொக்காகத் தான் இருக்கும் அதனால் தான் அதற்கு ஒரே ஒரு கால் இருந்தது“ என்றானாம் என்று கதையை முடித்தார் என் நண்பர்.

முயலின் இன்னொரு காலும், கொக்கின் இன்னொரு காலும் சீடர்களின் வயிற்றுக்குள் போனதை கதைபடித்த உங்களால் உணர்ந்துகொள்ளமுடியும்..

ஆனால்..

அந்த கால்களின் சுவைமட்டும் இன்னும் நம் நாக்கிலும் இருக்கிறதோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

அதனால் தானே நாமும் சில நேரங்களில் நாம் சொல்வதுதான் சரி என்று சாதித்துவருகிறோம்...
 
இதை நண்பர் ஒருவர் எனக்கு  மின்னஞ்சல்லில் இருந்து அனுப்பிஇருதார் ....

ஒரு அழகான கிராமத்தின் காதல் கதை



ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு

பெண் இருந்தாள்..அவளைப் போல் ஒருஅழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து

விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை

விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவேமுடியவில்லை.


அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு

செய்து செய்தித்தாளில் விளம்பரமும்

கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர்

திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய

முடிவ செய்தனர். திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது

எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்

எதிரிலேயே உயிர் துறந்தான்.உடனே அந்தப் பெண்னும்

மனநிலை பாதிக்கப்பட்டாள்.ரொம்ப நாட்களுக்குப் பிறகு

நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன்

வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள்

மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில்

இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும்

என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள்

ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை

 மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின்

தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும்

அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின்

கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை

துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும்

அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள்

கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை

போகவில்லை. அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில்

வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம்

கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய்

இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,*ஸர்ப்**எக்ஸல்*

போடு கறை போயிடும்" என்றது.

இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு!


நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்

தோப்புக்கரணம் போடுவது ஏன்? தெரியாத உண்மை



ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி

பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

குறிப்பு:  இந்த மெயில் பிடித்து இருதால் உங்கள்ளது நண்பர்களுக்கு இதை அனுபலமே

தர்மச் சக்கரம் (அசோக சக்கரம்)

தர்மச் சக்கரம்

அசோக சக்கரம்

அசோகச் சக்கரம் அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 கோல்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோக சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு
இந்தியக் குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய சின்னம்

நாட்டின் தேசிய சின்னம் எதுவென்று உங்களுக்குத் தெரியும். முத்திரைகள், பணத்தாள், நாணயம் போன்ற எல்லாவற்றிலும் அச்சின்னம் இருக்கிறது. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர். அதன் மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில் கொண்ட முரசு போன்ற அமைப்பு. அந்தச் சக்கரங்கள் தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன. அவற்றில் 24 ஆரங்கள் இருக்கின்றன. சக்கரங்களுக்கு அருகிலேயே நான்கு பக்கமும் சிங்கம், குதிரை, எருது, யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன. முரசின் மேற்பகுதியில் நான்கு சிங்கங்கள் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டி நிற்கின்றன. இக்கலைப்படைப்பை உருவாக்கியவர் பேரரசர் அசோகர். இக்கலைப் படைப்பின் தர்மசக்கரம் தான் நமது நாட்டுக் கொடியிலும் இடம் பெற்றுள்ளது. அதை நாம் அசோகச் சக்கரம் என்றே அழைக்கிறோம்.

இந்த அசோக சக்கரத்தின் வரலாறு

அசோகர் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த பேரரசர். இவரின் அரசு மவுரிய அரசு. இவ்வரசு சந்திரகுப்த மவுரியரால் உருவாக்கப்பட்டது. சந்திர குப்தரின் மகனான பிந்துசாரருக்குப் பிறந்தவர்தான் அசோகர். அசோகரின் காலம் கி.மு. 273 முதல் கி.மு. 232 வரை ஆகும். அசோகர் 18 வயதில் இளவரசர் பொறுப்பினை ஏற்றார். உச்சயினி என்ற மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தார். அசோகருக்கு சகோதர சகோதரிகளாக நூறு பேர் இருந்தனர். அசோகர் இவர்களின் உதவியோடு அரசராக மாறினார். ஆனால் இவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அரசரானார் என்று வரலாற்று ஆசிரியர்கள் பொய்யாக எழுதுகிறார்கள். அச்செய்தி ஆதாரம் இல்லாததாகும்.

அசோகர் கி.மு.261இல் கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்தார். கலிங்க நாடு இன்றைய ஒரிசா மாநிலமாகும். இப்போரில் 1,50,000 போர் வீரர்கள் இறந்தனர். இதைப்போல பல மடங்கு வீரர்கள் காயமடைந்தனர். போர்க்கள காட்சியைக் கண்ட அசோகர் மனம் வருந்தி மனமாற்றம் அடைந்தார். உயிர்களுக்கு தீங்கு செய்யாமையைக் கற்பித்த புத்த மதத்துக்கு மாறினார். இந்த மதமாற்றத்திற்கு அசோகரின் மனைவியான தேவியும் துணையாக இருந்தார். தமது மகளான சங்கமித்திரையையும், மகேந்திரனையும் அண்டை நாடுகளுக்கு பவுத்தம் பரப்ப அனுப்பினார். புத்த மதத்திற்கு மாறிய அசோகர், மிகச் சிறந்த மக்கள் அரசராகப் பணியாற்றினார். அவரின் ஆட்சியில் நடைபெற்ற சீர்த்திருத்தங்களும், பணிகளும் அன்று மக்களாட்சியை உருவாக்கின.

ஆலமரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங்களை சாலையோரங்களில் நடச் செய்தார். பயணிகள் தங்கிப் போக சத்திரங்கள் கட்டப்பட்டன. குடிதண்ணீருக்காக எண்ணற்ற கிணறுகள் தோண்டப்பட்டன. யாகங்களில் விலங்குகளை பலியிடுவதையும், வேட்டையாடுவதையும் தடை செய்தார். மருத்துவமனைகள் கட்டப்பட்டன. மனிதர்களுக்காக மட்டும் அன்றி விலங்குகளுக்காகவும் மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. சிறந்த சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தடை செய்து ஆணை பிறப்பித்தார். அதை மீறுகிறவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டது.

அவர் ஆட்சிக் காலத்தில் சிறையில் இருந்த குற்றவாளிகள் 25 முறை மனித நேயத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். வரிகளின் மூலம் கிடைக்கும் பணம் மக்கள் நலனுக்காகவே செலவு செய்யப்பட்டது. போர் செய்வது நிறுத்தப்பட்டது. சாதி, மத வெறி நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன.

அசோகர் தான் முதன் முதலில் கல்வெட்டுகளை மக்களுக்கு செய்திகளைச் சொல்ல பயன்படுத்திய அரசர். அவர் தன் நாட்டு மக்களின் பேசும் மொழியான பாலி மொழியைத்தான் கல்வெட்டுகளை எழுத பயன்படுத்தினார். புலனடக்கம், தூய எண்ணம், நன்றியுடைமை, அறக்கொடை புரிதல், அன்பு, தூய்மை, சத்தியம், சேவை மனப்பான்மை, ஆதரவு தருதல், பெரியோர்களை மதித்தல் ஆகிய நன்நெறிகளை அசோகர் கடைப்பிடித்தார். மக்களையும் கடைப் பிடிக்கச் செய்தார். இவ்வாறு செயல்புரிந்ததால் தான் அரசர்களில் விண்மீன் போன்றவர் என அசோகர் புகழப்படுகிறார்.

பட்டொலி வீசிப் பறக்கும் நமது மூவர்ண தேசிய கொடியில் மத்தியில் தர்மச்சக்கரம் உள்ளது. இதில் 24 ஆரம்ங்கள் உள்ளன. அந்த ஆரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு கோட்பாட்டை விளக்குகிறது...

தர்மசக்கரத்தின் கோட்பாடுகள்

1. அன்புடமை

2. அருளுடைமை

3. அறமுடைமை

4. ஆசையில்லாமை

5. அறிவுடைமை

6. அழுக்காறின்மை

7. இனிமையுடைமை

8. இன்னா செய்யாமை

9. களவு செய்யாமை

10. ஈதல்

11. காமம் கொள்ளாமை

12. ஊரோடு ஒழுகல்

13. ஒழுக்கம் உடைமை

14. மது உண்ணாமை

15. சூது கொள்ளாமை

16. பண்புடைமை

17. ஊக்கமுடைமை

18. பொது உடைமை

19. பொருளுடைமை

20. பிறனில் விழையாமை

21. போர் இல்லாமை

22. பொய் சொல்லாமை

23. கல்வியுடைமை

24. ஒற்றுமை

உலக ஜனநாயகத்தில் உன்னத நாடாக விளங்கிக் கொண்டிருக்கும் நம் இந்தியா தான் கொண்டிருக்கும் அத்தனைக்கும் ஆழமான விளக்கங்களும், தெளிவாக பதில்களையும் வைத்துள்ளது. இங்கு இருக்கும் காக்கை குருவிக்கு கூட வரலாறுகள் இருக்கிறது...

ஆகையால் அத்தனையையும் போற்றுவோம் தேசத்தை காப்போம்..


ஜெய்ஹிந்த்..........  ஜெய்ஹிந்த்............ஜெய்ஹிந்த்.........ஜெய்ஹிந்த்

நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு நல்வாழ்ந்துகள்

ஒரு வயதான தாய் தன் மகனுக்கு இப்படியாக கடிதம் எழுதுகிறார்....

ஒரு வயதான தாய் தன் மகனுக்கு இப்படியாக கடிதம் எழுதுகிறார்....







அன்புள்ள மகனே !


நலமா? ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________ .


அன்று உன் விரல்பிடித்து


நடக்க செய்த


அதே ஸ்பரிசத்தோடே.....


இன்று பேனாபிடித்து


எழுதுகிறேன்.....




இந்த கடிதத்தை


உன் மகனுக்கு தெரியாமல்படி..


நீயும் பிற்காலத்தில்


இப்படி எழுதமலிருக்க....



உன்னை சபிப்பதோ...


என் துயரங்களை சொல்வதோ...


இக்கடிதத்தின் நோக்கமல்ல...


உன் தாய் என்று கூட‌


பாரபட்சம் பார்க்காமல்


என் கடைசி ஆசையை


தெரிவிப்பதே....




நான் இறந்தப்பிறகு கொல்லியை


தலையில் வைக்காதே...


வயிற்றில் வை....




என் உடலிலே


முதலில் எரியபோகும் உறுப்பு


உன்னை சுமந்த கருப்பையாகதான்


இருக்க வேண்டும்.....




நீ பால்வார்க்க‌


கொடுத்து வைக்காத வயிறு

அஸ்தியாவது கொடுக்கட்டும்....




இந்த கடிதம் எழுதுகிற போது


கையில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது


ஒன்றுமில்லை...


கடந்த ஐந்தாண்டுகளாய் கொதித்த


கண்ணீர்துளி ஒன்று..


கை மீது சிந்திவிட்டது


அதுவே காரணம்......






மகனே .... பெத்தமனம் பித்து


என்பதற்கு சான்றாய்


என் கடைசிவரி...






உன் வீட்டு உணவு தான்


எனக்கில்லை என்றாகிவிட்டது...


ஒருவேளை நீ இந்த கடிதத்திற்கு


பதில் போட்டால்.......


தபால்தலையை எச்சிலால் அல்ல....


ஒரே..... ஒரு ....... சோற்றுப் பருக்கையால்


ஒட்டி அனுப்பு........




இப்படிக்கு


வயதான குழந்தை உன் அம்மா.


உங்கள் தொகுதி எம்.எல்.ஏவை இனி இணையம் மூலமும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்

ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail. I.D கொடுக்கப்பட்டுள்ளது.இனிமேல் உங்கள் "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.எல்லா M.L.A.க்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது


அதனால்... உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.


234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே கொடுக்கப்பட்டுள்ள E-Mail. I.Dக்கள்



1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in

2 Alandur - mlaalandur@tn.gov.in

3 Alangudi - mlaalangudi@tn.gov.in

4 Alangulam - mlaalangulam@tn.gov.in

5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in

6 Anaicut -- mlaanaicut@tn.gov.in

7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in

8 Andimadam --- mlaandimadam@tn.gov.in

9 Andipatti----mlaandipatti@tn.gov.in

10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in

11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in

12 Arantangi-- mlaarantangi@tn.gov.in

13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in

14 Arcot - mlaarcot@tn.gov.in

15 Ariyalur --mlaariyalur@tn.gov.in

16 Arni -- mlaarni@tn.gov.in

17 Aruppukottai -mlaaruppukottai@tn.gov.in

18 Athoor--- mlaathoor@tn.gov.in

19 Attur -mlaattur@tn.gov.in

20 Avanashi -mlaavanashi@tn.gov.in

21 Bargur -mlabargur@tn.gov.in

22 Bhavani---mlabhavani@tn.gov.in

23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in

24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in

25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in

26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in

27 Chengam---mlachengam@tn.gov.in

28 Chepauk---mlachepauk@tn.gov.in

29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in

30 Cheyyar---mlacheyyar@tn.gov.in

31 Chidambaram---mlachidambaram@tn.gov.in

32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in

33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in

34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in

35 Colachel---mlacolachel@tn.gov.in

36 Coonoor----mlacoonoor@tn.gov.in

37 Cuddalore---mlacuddalore@tn.gov.in

38 Cumbum---mlacumbum@tn.gov.in

39 Dharapuram---mladharapuram@tn.gov.in

40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in

41 Dindigul---mladindigul@tn.gov.in

42 Edapadi---mlaedapadi@tn.gov.in

43 Egmore---mlaegmore@tn.gov.in

44 Erode----mlaerode@tn.gov.in

45 Gingee---mlagingee@tn.gov.in

46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in

47 Gudalur----mlagudalur@tn.gov.in

48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in

49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in

50 Harbour-----mlaharbour@tn.gov.in

51 Harur----mlaharur@tn.gov.in

52 Hosur---mlahosur@tn.gov.in

53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in

54 Jayankondam---mlajayankondam@tn.gov.in

55 Kadaladi---mlakadaladi@tn.gov.in

56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in

57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in

58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in

59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in

60 Kangayam---mlakangayam@tn.gov.in

61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in

62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in

63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in

64 Karur----mlakarur@tn.gov.in

65 Katpadi----mlakatpadi@tn.gov.in

66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in

67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in

68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in

69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in

70 Kolathur---mlakolathur@tn.gov.in

71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in

72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in

73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in

74 Kulithalai----mlakulithalai@tn.gov.in

75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in

76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in

77 Kuttalam---mlakuttalam@tn.gov.in

78 Lalgudi---mlalalgudi@tn.gov.in

79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in

80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in

81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in

82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in

83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in

84 Mangalore----mlamangalore@tn.gov.in

85 Mannargudi----mlamannargudi@tn.gov.in

86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in

87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in

88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in

89 Melur---mlamelur@tn.gov.in

90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in

91 Mettur---mlamettur@tn.gov.in

92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in

93 Morappur---mlamorappur@tn.gov.in

94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in

95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in

96 Musiri---mlamusiri@tn.gov.in

97 Mylapore---mlamylapore@tn.gov.in

98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in

99 Nagercoil---mlanagercoil@tn.gov.in

100 Namakkal---mlanamakkal@tn.gov.in

101 Nanguneri---mlananguneri@tn.gov.in

102 Nannilam----mlanannilam@tn.gov.in

103 Natham-----mlanatham@tn.gov.in

104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in

105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in

106 Nilakottai---mlanilakottai@tn.gov.in

107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in

108 Omalur---mlaomalur@tn.gov.in

109 Orathanad---mlaorathanad@tn.gov.in

110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in

111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in

112 Palacode---mlapalacode@tn.gov.in

113 Palani----mlapalani@tn.gov.in

114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in

115 Palladam---mlapalladam@tn.gov.in

116 Pallipattu---mlapallipattu@tn.gov.in

117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in

118 Panruti---mlapanruti@tn.gov.in

119 Papanasam---mlapapanasam@tn.gov.in

120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in

121 ParkTown----mlaparktown@tn.gov.in

122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in

123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in

124 Perambalur----mlaperambalur@tn.gov.in

125 Perambur---mlaperambur@tn.gov.in

126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in

127 Peravurani---mlaperavurani@tn.gov.in

128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in

129 Pernambut---mlapernambut@tn.gov.in

130 Perundurai---mlaperundurai@tn.gov.in

131 Perur---mlaperur@tn.gov.in

132 Pollachi---mlapollachi@tn.gov.in

133 Polur---mlapolur@tn.gov.in

134 Pongalur---mlapongalur@tn.gov.in

135 Ponneri---mlaponneri@tn.gov.in

136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in

137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in

138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in

139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in

140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in

141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in

142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in

143 Ranipet---mlaranipet@tn.gov.in

144 Rasipuram----mlarasipuram@tn.gov.in

145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in

146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in

147 Royapuram---mlaroyapuram@tn.gov.in

148 Saidapet---mlasaidapet@tn.gov.in

149 Salem -I---mlasalem1@tn.gov.in

150 Salem-II---mlasalem2@tn.gov.in

151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in

152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in

153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in

154 Sankari---mlasankari@tn.gov.in

155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in

156 Sattangulam----mlasattangulam@tn.gov.in

157 Sattur---mlasattur@tn.gov.in

158 Sedapatti----mlasedapatti@tn.gov.in

159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in

160 Sholavandan---mlasholavandan@tn.gov.in

161 Sholinghur----mlasholinghur@tn.gov.in

162 Singanallur---mlasinganallur@tn.gov.in

163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in

164 Sivaganga----mlasivaganga@tn.gov.in

165 Sivakasi---mlasivakasi@tn.gov.in

166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in

167 Srirangam---mlasrirangam@tn.gov.in

168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in

169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in

170 Talavasal---mlatalavasal@tn.gov.in

171 Tambaram---mlatambaram@tn.gov.in

172 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@tn.gov.in

174 Thalli---mlathalli@tn.gov.in

175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in

176 Thanjavur---mlathanjavur@tn.gov.in

177 Theni---mlatheni@tn.gov.in

178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in

179 Thirumayam---mlathirumayam@tn.gov.in

180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in

181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in

182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in

183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in

184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in

185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in

186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in

187 Thottiam---mlathottiam@tn.gov.in

188 Tindivanam---mlatindivanam@tn.gov.in

189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in

190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in

191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in

192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in

193 Tiruppattur-----mlatiruppattur@tn.gov.in

194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in

195 Tirupporur----mlatirupporur@tn.gov.in

196 Tiruppur----mlatiruppur@tn.gov.in

197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in

198 Tiruttani----mlatiruttani@tn.gov.in

199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in

200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in

201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in

202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in

203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in

204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in

205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in

206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in

207 Triplicane----mlatriplicane@tn.gov.in

208 Tuticorin---mlatuticorin@tn.gov.in

209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in

210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in

211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in

212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in

213 Usilampatti---mlausilampatti@tn.gov.in

214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in

215 Valangiman----mlavalangiman@tn.gov.in

216 Valparai----mlavalparai@tn.gov.in

217 Vandavasi----mlavandavasi@tn.gov.in

218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in

219 Vanur----mlavanur@tn.gov.in

220 Varahur-----mlavarahur@tn.gov.in

221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in

222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in

223 Vedasandur---mlavedasandur@tn.gov.in

224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in

225 Vellakoil---mlavellakoil@tn.gov.in

226 Vellore---mlavellore@tn.gov.in

227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in

228 Vilavancode---mlavilavancode@tn.gov.in

229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in

230 Villupuram---mlavillupuram@tn.gov.in

231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in

232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in

233 Yercaud---mlayercaud@tn.gov.in

234 ThousandLights---mlathousandlights@tn.gov.in



 நன்றி : சேலம் பத்திரிகையள்ளார் சங்கம் ( தகவல் )



காக்கா ஏன் கறுப்பாச்சின்னு தெரியுமா??

காக்கா ஏன் கறுப்பாச்சின்னு தெரியுமா??



ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..

தமிழ் நாட்ல இருக்குற சேலத்தில் இருக்குற எங்க அப்பாவுக்கு கடைசியா ஒரு அழகான பையன் பிறந்தானாம்(அதாங்க அது நான்தான்). கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வர மாட்டேனாம். நல்ல பெரியவனாகி விபரம் தெரிஞ்ச வயசுல வெளிய விளையாட வந்தேனாம். அவன் பேரு ரா.முனிராஜா (அதாங்க என்னோட பெயர்). நான் விளையாடறத பார்த்த சூரியனுக்கு என்னை ரொம்ப பிடிச்சு போச்சாம். எனக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பேனாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே என்கிட்ட பேசிட்டு இருக்குமாம். நாங்க அப்போ ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டோமாம். ஒரு நாள் சூரியன் எனக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில மோதிரம், பேன்ட், சட்டை,வாசனை திரவியங்கள், முத்து மாலை, கடிகாரம் எல்லாம் கொடுத்து முனிராஜா கிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு நான் இருந்த இடத்தை நோக்கி பறந்து வந்துச்சாம்.


வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.


காக்கா நல்லா சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கிட்டே வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு நான் இருக்குற இடத்தை நோக்கி வந்துடுச்சாம். அங்க என்கிட்டே சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் கூட இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசி எரிஞ்சிட்டேணாம்.


மறுநாள் காலை,சந்தோஷமா என்னை பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

அப்படின்னு எங்க அம்மா என்கிட்ட சொன்னங்க.



இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?




கடவுள் ஏன் மனிதனை இப்படி படைத்தார் ?...

இந்த உலகிலே உயிரினங்களை படைக்கும் முன்னர் இறைவனுக்கு ஒரு சந்தேகம் வந்திச்சாம். எதிர்காலத்தில் உலகில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகரித்துவிட்டால் என்ன செய்வது ? என்று,
நீண்ட கால ஜோசனையின் பின்னர் அவருக்கு ஒரு சிந்தனை தோன்றியதாம். படைக்கும் ஜீவராசிகளிலே ஒன்றை மட்டும் முற்றிலும் வித்தியாசமாக படைத்து விடுவது என்று.

அந்த உயிரினம் தன்வாழ்க்கை காலத்தில் தாமாகவே தம்மை அழித்துக்கொள்வது போல இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்...

பேராசை என்ற வியாதியை தமக்குள் ஏற்ப்படுத்துவதன் மூலம் அந்த உயிரினம் தமக்கான தேவைகளை அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டும், இதனால் போட்டி ,பொறாமை ,பழிவாங்கும் குணம் போன்ற அடிப்படை பண்புகளை கொண்டு தமக்கும் தம்மை சூழ்ந்து உள்ளவற்றுக்கும் நிகழ்காலம் எதிர்காலம் என்று என்றுமே அழிவுகளை உண்டாக்கிக்கொண்டு இருக்க வேண்டும்.

இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஒரே வழி அந்த உயிரினம் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என்று கடவுள் முடிவு செய்தாராம்.

ஆகவே கடவுள் தான் படைக்கும் உயிரினங்களில் "மனிதன்" என்ற உயிரினத்தை தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் ஆறு அறிவை கொடுத்து படைத்து விட்டாராம்.



ஓ வாழ்க்கையே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற சுவாமி சுகபோதானந்தாவின் உலகப் புகழ் பெற்ற நூலில் இருந்து.



02. ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.

03. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.

04. கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த பொறுமைசாலியும் கூட.

05. வாழ்க்கை ஓர் ஓவியம் போன்றது. அது கணிதமல்ல, நிறையப்பேர் வாழ்க்கையை கணிதமாக்கி நாசப்படுத்தியுள்ளார்கள். நீங்களாவது அதை ஓவியமாக்கி சந்தோசமான உலகத்தை உருவாக்குங்கள். எறும்பின் ஞானத்தை பின்பற்றுங்கள்.

06. மோசமான பறவைகள்தான் தனது கூட்டிலேயே எச்சமிடும் என்பதை உணர்ந்து தனது குடும்பத்தை அழிக்காமல் குடும்பத்தோடு மகிழ்வாக வாழ்வை அனுபவிக்க வேண்டும்.

07. விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் மிகச்சிறந்த ஆசான்.

08. உங்களை மாற்றிப் பாருங்கள் இந்த உலகம் எத்தனை சுவாரசியமாக மாறுகிறது என்பதை உணர்வீர்கள்.

09. பிரபஞ்சம் காலம் இரண்டும் முடிவே இல்லாதவை. இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். நீங்களே வாழ்க்கைக்கு வீணான வரையறைகளை போட்டுக்கொண்டு அதுதான் விதியென எண்ணி வாழ்வை குழப்பாதீர்கள்.

10. விட்டில் பூச்சி விளக்கொளியில் பலியாகிறது, மனிதனோ தனது கற்பனையால் பலியாகிறான்.

11. உங்கள் போராட்டம் புனிதத் தன்மையோடு அமைய வேண்டும். பலத்தோடு இருப்பதற்காக புனிதத் தன்மையை இழப்பது சிறப்பல்ல. பலத்தை புனிதமான வழியில் உபயோகப்படுத்துவதே பலத்திற்கு சிறப்பு. கோழைகளே பலத்தை தவறான வழியிலும், பழி தீர்க்கவும் பயன்படுத்துவர் என்பதை அறிக.

12. உயிரோடு இருக்கும் எலி இறந்துபோன புலியை விட பலமானது.

13. கடினமான வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கும் கொடிய விஷமாகும்.

14. எல்லாவற்றையும் அரவணைப்பதே அன்பு எதையும் நிராகரிப்பது அன்பல்ல.

15. நேர்மை ஒரு தெய்வீக ஆணை. அந்த நேர்மை பலன் தரும் ஆனால் சிலருக்கு அது போதியதாக தெரிவதில்லை.

16. விவேகமற்ற மனிதர்கள் தங்கள் நிழல்களுடனேயே சண்டை போடுவார்கள்.

17. வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.

18. எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.

19. ஒன்று வழி நடாத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.

20. திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !

21. உங்கள் மூளையை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்தால் எல்லா அவமதிப்புக்களையும் இலகுவாக தாண்டிவிடலாம்.

22. மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு அறிவின் அடையாளமல்ல அதுபோல மடமடவென செய்யும் செயல்கள் செயல் திறனின் அடையாளமும் அல்ல.

23. நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.

24. சின்னச் சின்னக் கணங்களின் மொத்தமான கூட்டுத் தொகையே நீண்ட வாழ்க்கை அதுபோல இழந்துவிட்ட சின்னச் சின்னக் கணங்களின் கூட்டுத் தொகையே மரணம்.

25. நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.

26. தாமதப்படுத்துவது என்பது மூளைச் சோம்பலின் இன்னொரு வடிவம்.

27. சோம்பேறி மனிதன் என்பவன் கடிப்பதற்கோ வாலாட்டுவதற்கோ வலுவற்ற செத்த நாயைப் போன்றவன்.

28. ஒரு கூர்மையான மனது எந்தக் கதவுகளையும் திறக்கும் அதேபோல ஒரு சேம்பேறி மனதிற்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.

29. உங்கள் சந்தோஷத்திற்கான காரணத்தை மாற்றிப் பாருங்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதை.

30. மற்றவர்களின் கட்டளைகளை செய்யாதீர்கள், முதலில் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள், பிறகு அந்தச் செயலை விரும்புங்கள்.



நுகர்வோர் நலன்கள் இலவசம்

ஒவ்வொரு நாட்டுக்கும் விதவிதமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமிருந்தாலும் அடிப்படையில் ஐ.நா. அடிப்படை உரிமைகளைக்கொண்டு மேலும் பல சட்ட விதிகளை புகுத்தி நுகர்வோர் நலனையே மையமிட்டுள்ளது.

இங்கு நுகர்வோர் என்கிற சொல்லாடல் ஒரு பொருளை வாங்குபவர் என்று பொருள் கொள்வதல்ல வணிகரீதியல்லாமல் வாங்குபவரைத் தான் குறிக்கிறது. அப்படி வணிகரீதியல்லாமல் தனிநபர் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பொருட்கள் மீதான குறைகளை எப்படி எதிர்கொள்வது? சாதாரண மளிகை சாமானிலிருந்து மொபைல் வரை ஏமாற்றப்படுகிறார்கள் இந்த வரிசையில் பலர் ஏமாற்றப்பட்டதையே அறியாமலும் உள்ளனர். கவர்ச்சி விளம்பரங்களாலும், இலவச பொருட்களாலும், போலி பரிந்துரைகளாலும் பரிதாபமாக பாதிக்கப்படுவது நாமே.
முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் நாம் வாங்கும் பொருளுக்கும் நமது பணத்திற்கும் ஒரு புரிதல் வேண்டும்

முடிந்த வரை ஊடகங்கள் மக்களுக்கு இத்தகையச் செய்திகளை வெளிக்கொணர வேண்டும்.

வர்த்தக நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து தங்கள் நுகர்வோரிடம் வெளிப்படையாக நடக்க வேண்டும், போதிய நம்பத்தன்மையை ஏற்படுத்தவேண்டும்

மக்களும் தங்களால் முடிந்த அளவு செய்திகளையும் சட்ட வழிமுறைகளையும் அறியவும் வேண்டும் பகிரவும் வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றியான கேள்வி ஞானம் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். இந்த தொடர்புகள் இல்லாத மக்கள் தான் அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
பலம் வாய்ந்த நிறுவனங்களை எதிர்த்து தனிமனிதன் செய்யும் புகாரைவிட(அதிகம் செய்யவதில்லை) ஊர்கூடிச்செய்தால் நிச்சயம் பலன் கிட்டும். அப்போது யார்யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எங்கே இந்த தகவலைப் பெறமுடியும்? இணையசுழல் அதற்கு பல வசதிகளைச் செய்துள்ளது ஆனால் பயன்படுத்துபவர்கள்தான் குறைவு. பல இணையக்குழுக்கள் உள்ளன

இவற்றை நாம் பயன்படுத்தும் முறை எப்படிஎன்றால், நாம் புகார்களை அளிப்பதைவிட மற்றவர்களின் புகாரைக் கொண்டே நல்ல பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். இருந்தால் நாமும் புகார் அளிக்கலாம்

http://www.complaintsboard.com/

http://www.complaints.com/

http://www.registercomplaints.com

இந்திய அமைப்புகள்

http://www.indiaconsumerforum.org/

http://www.consumercomplaints.in/

http://consumer.org.in/

http://www.bis.org.in/cad/complain.htm

சில சமயங்களில் கைமேல் பலனாக புகாரளிக்கப்பட்ட நிறுவனமே நமக்கு உதவமுன்வரும்

சரி புகார் அளிக்கும் முன் நாம் முதலில் அடிப்படை தகவல்களை எப்படி பெறுவது? சட்டம் என்ன சொல்லுகிறது? போன்றவைதான் மிகமுக்கியமாகத் தேவை

http://india.gov.in/sectors/consumer_affairs/consumer_protection.php (இந்திய சட்டம்)

http://www.consumer.tn.gov.in/ நேரடி புகாரும் அளிக்கலாம்.

http://fcamin.nic.in/

பிரத்தேக விழிப்புணர்வு அமைப்புகள்

http://www.ccccore.co.in

http://fcamin.nic.in/

http://www.consumergrievance.com/

எந்த ஒரு புகார் அளிக்கும் முன் நாம் அந்தப் பொருளை முறைப்படி வாங்கிக்கொண்டோமா என சிந்தித்துச் செய்வது உத்தமம்.

ஆங்காங்கே சில அமைப்புகள் நுகர்வோர் நலனைப் பற்றி பேசினாலும் இணையத்தில் எனக்கு தெரிந்த வரை தமிழில் நுகர்வோர் பற்றிய இணையதளங்கள்

http://www.consumererode.org/

http://nukarvor-nalan.blogspot.com

http://lawforus.blogspot.com/

http://www.makkal-sattam.org/

மேலும் அதிகமாக உருவாக வேண்டும், அந்த துறைசார்ந்தவர்கள் இணைய விழிப்புணர்வை கொண்டுவரலாம். உங்களுக்கு தெரிந்த இணைப்புகளை எனக்கும் தெரியப்படுத்துங்கள்.

இரகசியம், பரம இரகசியம்...

இரகசியம், பரம இரகசியம்...


ரகசியம், பரம இரகசியம்...

கார் பிரேக் டவுன். அது ஒரு இரவு நேரம்.காட்டு பிரதேசம்.
துணைக்கு யாருமில்லை. நகரமோ வெகு தொலைவில்.

அருகில் ஒரு மடாலயம்.

'அன்று இரவு எங்காவது தங்கி, பின் காலையில் ஆகவேண்டியதை பார்த்துக்கொள்ளலாம்' என்ற எண்ணம் உதிக்க, மடத்தின் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த துறவியிடம், ' என்னுடைய கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது, இன்றிரவு இங்கு தங்குவதற்கு அனுமதி கிடைக்குமா?' என்றான்.

துறவியும் பெருந்தன்மையுடன் அனுமதித்து அறுசுவை உணவளித்ததோடு, அவனுடைய காரையும் சீடர்களைக் கொண்டு சரிசெய்தார்.

அவனும் மிகுந்த களைப்போடு உறங்கப் போகும் பொழுது, ஒரு விசித்திரமான ஒலியை கேட்டான். இதற்கு முன் கேட்டிறாத அந்த ஒலி அவனை மிகவும் பரவசப்படுத்தியது.

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.

அதற்கு ஒரு துறவி, ' அந்த ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்

நீ ஒரு துறவி அல்ல'.

அவன் மிகுந்த ஏமாற்றமடைந்தாலும், துறவிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு அவனுடைய வழியில் கிளம்பினான்.

ஒரு சில வருடங்களுக்கு பின். . .

மறுபடியும் அதே மடத்தின் அருகில் அவனுடைய கார் பழுதடைந்தது.

அன்று அவனை உபசரித்தது போலவே, இம்முறையும் அவனுக்கு உணவளித்து, காரையும் சரிசெய்தார்கள்.

அன்றிரவும், அந்த வினோத ஒலி!

மறுநாள் காலை துறவிகளிடம் 'அந்த ஒலி'யைப் பற்றி விசாரித்தான்.

அதற்கு ஒரு துறவி, ' அந்த ரகசிய ஒலியைப் பற்றி உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால் நீ ஒரு துறவி அல்ல'.

அவன், 'சரி! நான் துறவியானால்தான் அந்த ரகசிய ஒலியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றால்... நான் எவ்வாறு துறவி ஆக முடியும்?..'

துறவி பதிலலித்தார்.

' நீ இந்த உலகம் முழுவதும் சுற்றி வந்து, இவ்வுலகில் உள்ள புற்களின் தளைகளின் எண்ணிக்கையையும், மணல் துகள்களின் எண்ணிக்கையையும் மிகச் சரியாக அறிந்து கொண்டால்.. நீயும் துறவி ஆகி விடலாம்'.

அவன் தனது பாதையை நிர்ணயித்துக் கொண்டான்.

40 வருடங்களுக்கு பின்,

அவன் மறுபடியும் அந்த மடத்தின் கதவை தட்டினான்.

அனைத்து துறவிகளின் முன்னிலையில் வெற்றிக்களிப்போடு சொன்னான்.

' நான் உலகம் முழுவதும் சுற்றி வந்தேன்.

மொத்த புற்களின் எண்ணிக்கை 549,483,145,236,284,232.

மொத்த மணல் துகள்களின் எண்ணிக்கை 766,899,231,281,219,999,129,382

மூத்த துறவி,' நல்லது, நீ இப்பொழுது துறவி ஆகிவிட்டாய்.

இப்பொழுது அந்த வினோத ஒலியின் இரகசியத்தை காணலாம்'

மூத்த துறவி, அழகிய மரவேலைப்பாடுகளுடனிருந்த கதவை காட்டி,

'அந்த இரகசியம் இதற்கு பின்னால் இருக்கிறது' என்று, அதன் திறவுகோலை அவனிடம் தந்தார்.

கதவை திறந்தவுடன்.

அதனுள், கல்லினால் ஆன மற்றொரு கதவு.

அதையும் திறக்க,

மாணிக்க கற்களினால் அலங்கரிக்கப்பட்ட கதவு.

உள்ளே, நீலநிற கற்களினாலான கதவு.

மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக திறந்து உள்ளே போய் கொண்டிருந்தான்.

'மரகதம்'

'வெள்ளி'

'புட்பராகம்'

'செவ்வந்திக்கல்'

இறுதியாக துறவி சொன்னார்,' இதுதான் இறுதி கதவிற்கான திறவுகோல்.'

அவனும் முடிவில்லாப் பயணம் முற்றுப்பெறப்போவதை எண்ணி மிகுந்த ஆர்வத்துடன் அந்த கதவைத் திறந்தான்.

உள்ளே,

அவன் கண்ட காட்சி.

அற்புதம்!

ஆனந்தம்!

பேரின்பம்!

அந்த வினோத ஒலியின் இரகசியத்தை கண்டான்.

இதற்குமுன் அவன் அனுபவித்து அறியாத ஓர் உன்னத உணர்வு.

மெய் மறந்து நின்றான்.

ஆனால், நான் சொல்ல முடியாது..

அது என்னவென்று..

ஏனென்றால்..
நீ ஒரு துறவி அல்ல!.

சிந்தனைக்கு சில...!




பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்


சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்


யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும்


தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது


வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை


ஒப்புக்கொள்கிறோம்!


வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு


ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்


எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்


நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்


காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை


இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்


யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்


ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்


பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்


நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்


உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்


உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்


வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக


ஏமாந்து போகிறான்


உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்


செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்


அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்


வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்


வென்ற மனிதனாவான்


பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம்


பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்


ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்


சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப்


பெயர்தான் கோழைத்தனம்.


ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

எனது பங்குச்சந்தை ஆசை


கையில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் நம்மவர்களுக்கு உள்ளங்கை அரிக்கத்தொடங்கி விடும்…..அடியேனுக்கும் அப்படி அரிக்கவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்து ஒரு பிரபலமான பங்குத்தரகு நிறுவனத்தை நாடியபோது Demat account, Hike, Slow down அது  இது என ஆங்கிலத்தில் நான் இது வரை அறியாதவற்றை எல்லாம் கூறி எப்படியோ முதலீடு செய்யும் எண்ணத்தை எனக்கு உருவாக்கி விட்டனர்….
எனது பங்குச்சந்தை ஆசையை நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டபோது என்னை ஏற இறங்க பார்த்த அந்த நண்பர் “ஒரு குட்டிக்கதை சொல்கிறேன், அதைக் கேட்டுவிட்டு பின் ஒரு முடிவுக்கு வா” என்றார்….
ஆங்கிலத்தில் அவர் சொன்ன கதையை நம்ம பாட்டி ஸ்டைலில் மொழிபெயர்த்திருக்கிறேன்…
அந்தக்கதை…… 

ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு.அதாவது அவர் குரங்கு வியாபாரம் பண்ணப்போறதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டேகுரங்கு பிடுச்சு குடுக்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வொரு குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கறதாகவும் சொன்னாரு..

இத கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்ச அளவுக்கு காட்டுல போய் குரங்குபுடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கிகிட்டாங்க. கிட்ட தட்டஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சிபோச்சு..
இப்ப அந்த வியாபாரி, ஒவ்வொரு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா சொன்னாரு… உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு போய் முடிஞ்ச அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம் வாங்கிகிட்டாங்களாம் .

இப்படியே ரெண்டு வாரம் போச்சு.. ஊருல ஒருகுரங்கு கூட இல்ல.. காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ அந்த வியாபாரி சொன்னாராம்..நான் ஊருக்கு போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும் நிறைய குரங்கு பிடிச்சு குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய் குடுக்கறேன்னு… நான் வர வரைக்கும்  இந்த பிடிச்ச குரங்க எல்லாம் பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம்.

மக்களுக்குஎல்லாம் அப்படியே Tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு குரங்குகூட இல்ல… காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல..
இப்ப பாத்து இந்த வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே… என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தாங்களாம்..அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்.. இங்க பாருங்க..
உங்களுக்கோ பிடிக்க குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பத்திரமா என்கிட்டதான் இருக்கு.. என் முதலாளி வர்ரதுக்குள்ள இந்த குரங்கை எல்லாம் 35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்தவுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு  வித்துடுங்கன்னு சொன்னாராம்..

திருப்பியும்… ஊர் மக்கள் எல்லாம்  அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும் அந்த முதலாளி வந்த வுடனே  இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்என்ற எண்ணத்தோட…
இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் எஸ்கேப்பு….

ஊரு full 

லா

 –  இப்போ குரங்கா தான் இருக்கு

மின் தட்டுப்பாடு




பள்ளிக் குழந்தைகள்

பாடம் படித்துக் கொள்ளட்டும்

சூரியனே..

உன் மாலைப் பொழுதை

சற்று நீட்டித்துக் கொள் !

வீட்டு பட்ஜெட்டில்

மெழுகு வர்த்தியின்

எண்ணிக்கையாவது

சற்றுக் குறையட்டும்

மின்மினிப் பூச்சிகளே

எங்கள் வீட்டிற்குள்

வந்து விளையாடுங்கள் !

எரியாத தெருவிளக்கின் அடியில்

எப்படி பூ விற்பாள்

எங்கள் ஊர் பூக்காரி ?

நிலாவே

அமாவாசையன்றும் கூட

சிறிது நேரம் வந்துவிட்டு போ !

எரியும் அடுப்பின் வெளிச்சத்தில்

எப்படி எங்களால்

ஒரு ருபாய் அரிசியில்

கல் பொறுக்க முடியும் ?

பூமிக் கூரையிலிருக்கும்

விண்மீனே .. எங்கள்

கூரை வீட்டுக்குள்ளும் வருவாயா?


இருக்கிறது என்பதற்காக

இருளைப் பகலாக்கி

விளையாட்டுப் போட்டி கண்டோம் !

குளிர் காலத்தில் கூட

குளிர் அறை கேட்டோம் !

முழத்துக்கொரு விளக்கு வைத்து

பொதுக்கூட்டம் போட்டோம் !

கொசு மட்டுமே நடமாடும்

நடு இரவில் கூட

விளக்கு வைத்து

விளம்பரப் பலகையை

மினுங்க வைத்தோம் !

அலங்கார விளக்குகள் நடுவே

அமைச்சரை அழைத்து வந்தோம் !

இருந்தது தீர்ந்ததால்

இருளாகிப் போனது இப்போது !


\இயற்கையே ...

இருளைப் போக்க

நீ

வருவது எப்போது ?





ஒன்றி போதலே வாழ்க்கை... (ஜென்கதைகள்)



புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படை சந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தை மக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும் சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை.

பூர்ணகாஷ்யபா நேரடியாய் புத்தரிடமே சென்று கேட்டார், “”நான் எங்கு செல்லட்டும்?”

புத்தர் சிரித்தபடி சொன்னார், “”நீயே தேர்வு செய்யப்பா.” இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார். சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் புத்தர் கேட்டார், “”அந்தப் பகுதிக்கா? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் அடிதடி சண்டையில் இறங்குபவர்கள், கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள். இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்?”

“ஆமாம்” என்று தைரியத்தோடு சொன்ன சீடனிடம் புத்தர் சொன்னார்…

“உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்.”

“ம்…”

“முதல் கேள்வி, அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?”

“ரொம்ப ஆனந்தப்படுவேன். ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை; உதைக்கவில்லை.

திட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்களே; மிகவும் நல்லவர்கள்… என்று நன்றி சொல்வேன்.”

“இரண்டாவது கேள்வி. ஒருவேளை திட்டாமல் அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?”

“அவர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என ஆனந்தப்படுவேன்.”

“மூன்றாவது கேள்வி. ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?”

“ஆஹா இன்னும் ஆனந்தப்படுவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று மிகவும் ஆனந்தப்படுவேன்” என்று சொன்னதும்,

“நன்றாக தேறிவிட்டாய். அங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் நீ வாழ்ந்து விடுவாய். எதனாலும் இனி உன்னை வீழ்த்தமுடியாது. எப்போதும் ஆனந்தமாயிருக்க பக்குவப்பட்டுவிட்டாய். எங்கு சென்றாலும் நல்லாயிருப்பாயப்பா. போய் வா” என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.

பொது நீதி : எந்தச் சூழலையும் ஆனந்தமாக அணுகக் கற்றுக் கொண்டால், எந்த சூழலையும் ஆனந்தமயமாக்கிட முடியும். இல்லாவிட்டால் ஆனந்தமயமான சூழல்கள் வாய்த்தால்கூட, அதிலும் ஏதாவது துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

குளோபல் சிஸ்டம்ஸ் ( GLOBAL SYSTEMS ): அரசு அதிகாரிகள் உணர்வார்களா :அனைவரும் காணவேண்டிய வ...

குளோபல் சிஸ்டம்ஸ் ( GLOBAL SYSTEMS ): அரசு அதிகாரிகள் உணர்வார்களா :அனைவரும் காணவேண்டிய வ...: அரசு அதிகாரிகள்உணர்வார்களா : அனைவரும் காணவேண்டிய வீடியோ இது ஒரு குறும்படம் .அரசு அதிகாரிகளும் மக்களும் எப்படி இருக்...

இந்தியாவில் ஏன் இத்தனை பிரச்சனைகள்?




இந்தியாவில்  மக்கள் தொகை 100 கோடி மேல்..








9 கோடி பணி ஓய்வு பெற்றவர்கள்




30 கோடி மாநில அரசு ஊழியர்கள்17 கோடி மத்திய அரசு ஊழியர்கள்(இரண்டு பேரும் வேலை செய்வதில்லை)





 










 


1 கோடி IT Professionals. (இந்தியாவிற்காக வேலை செய்வதில்லை)





23 கோடி பள்ளிகளில் படிக்கின்றனர்























1 கோடி 5 வயதிற்குற்ப்பட்டவர்கள்



15 கோடி பேர் வேலையில்லாதவர்கள்


1.2 கோடி எப்போதும் மருத்துவமணையில் இருப்பவர்கள்

 
  


2 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் உழைத்துக்கொண்டிருக்கிறார்ள்



















இந்தியா கணக்குப்படி சராசரியாக 79,99,998 சிறைச்சாலையில் இருப்பவர்கள்



மீதி இருப்பது இரண்டு பேர், நீங்களும் நானும்தான்.

உங்களுக்கு எனது மின் அஞ்சல்லைப் படிப்பதற்கும் கருத்தைப் பதிவு பண்ணுவதற்கும் மட்டுமே நேரமிருக்கிறது.




நான் ஒருவன் மட்டும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டால் போதுமா? ??????????